TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு
மட்டும்
உரம்
விற்பனை
செய்ய
வேண்டும்
– அரியலூர்
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
அரியலூர் மாவட்டத்தில்
உர
இருப்பு
தொடர்பாக
வேளாண்மை
கூட்டுறவு
கடன்
சங்கம்
மற்றும்
தனியார்
உர
விற்பனை
நிலையங்களில்
1339 டன்
யூரியா,
856 டன்
டி.ஏ.பி, 624 டன் பொட்டாஷ், 2411 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 356 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு
விநியோகம்
செய்யப்பட்டு
வருகிறது.
மேலும், செப்டம்பர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா உரம் 2460 மெ.டன்களில் இதுவரை 1440 டன்கள் வந்துள்ளது.
இதுவரை யூரியா 1057 மெ.டன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில்
வினியோகம்
செய்யப்பட்டு
உள்ளது.
மேலும்,
இம்மாதம்
1000 மெ.டன்கள் கூடுதலாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர் உரங்களான அசோஸ் பயிரிளம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா இவைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள்
ஆதார்
அட்டையுடன்
வரும்
விவசாயிகளுக்கு
மட்டுமே
உரம்
விற்பனை
செய்ய
வேண்டும்.
இந்த
உத்தரவை
மீறிடும்
உர
விற்பனை
நிலையங்கள்
மீது
நடவடிக்கை
எடுக்கப்படும்
எனவும்,
மொத்த
உர
விற்பனையாளர்கள்
வெளி
மாவட்டங்களுக்கு
உரங்களை
விற்பனை
செய்திடவும்
கூடாது
எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உரங்களை வெளி மாவட்டங்களில்
இருந்தும்
கொள்முதல்
செய்யக்கூடாது.
விவசாயிகளின்
தேவைக்கு
மேல்
அதிகமாகவும்
மற்றும்
இணை
உரம்
வழங்கவோ,
ஒரே
நபருக்கு
அதிக
அளவு
உரம்
வழங்கவோ,
குறிப்பிட்ட
விவசாயிகள்
பெயரில்
அதிகப்படியாக
உர
விற்பனை
கண்டறியப்பட்டாலோ,
சில்லறை
விற்பனை
உரிமம்
எந்த
முன்
அறிவிப்பும்
இன்றி
ரத்து
செய்யப்படும்.
உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட
அதிகபட்ச
விற்பனை
விலைக்கு
மேல்
விற்பனை
செய்யப்பட்டால்
கடும்
நடவடிக்கைகள்
எடுக்க
உத்தரவிடப்பட்டு
உள்ளது.