மதிப்பெண் பட்டியல்
உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கான கட்டணம் உயா்வு – அண்ணா பல்கலை
அண்ணா
பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட
பல்வேறு சான்றிதழ்களுக்கான கட்டணம்
உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில்,
ஒருங்கிணைந்த மதிப்பெண்
விவரங்கள் அடங்கிய, ‘டிரான்ஸ்கிரிப்ட்‘ சான்றிதழ் பெற,
கட்டணம் இரு மடங்காகி
உள்ளது. புதிய கட்டணமாக
1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘கிரேடு‘
விவரங்கள் அடங்கிய அசல்
சான்றிதழின் இரண்டாம் பிரதி
பெற ரூ.3,000; ஒருங்கிணைந்த கிரேடு மதிப்பெண் சான்றிதழின் இரண்டாம் பிரதிக்கு ரூ.5,000;
பட்ட சான்றிதழின் அசல்
பிரதி பெற ரூ.10
ஆயிரம்; தற்காலிக பட்ட
சான்றிதழில் திருத்தம் செய்ய
ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்ட
சான்றிதழில் மாதம் மற்றும்
ஆண்டு குறிப்பிட ரூ.300;
உண்மைத் தன்மை சான்றிதழுக்கு இந்திய நிறுவனங்கள் என்றால்,
ரூ.2,000, வெளிநாடுகள் என்றால்
100 அமெரிக்க டாலா்; அதாவது,
இந்திய மதிப்பில் ரூ.7,500
என கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.