தேனி கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரித்தல் தொடர்பாக 10 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி ஆக.23 முதல் செப்.,2 வரை நடக்கிறது. இதில் 18 வயது நிரம்பிய கிராமபுறத்தை சேர்ந்த வேலை இல்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுவோறுக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் புகைப்படம், ஆதார் நகல் ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.
அல்லது 95003 14193 என்ற எண்ணில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


