TAMIL MIXER
EDUCATION.ன்
காப்பீட்டு
செய்திகள்
பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் – ராணிப்பேட்டை
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத்
திட்டத்தில்
விவசாயிகள்
பதிவு
செய்யலாம்
என
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால்
ஏற்படும்
பாதிப்பிலிருந்து
விவசாயிகள்
வாழ்வாதாரத்தை
பாதுகாத்திட
பிரதமா்
பயிர்
காப்பீட்டுத்
திட்டத்தை
செயல்படுத்த
ரூ.2,339
கோடி
நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த
திட்டம்
37 மாவட்டங்களில்
செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை
மாவட்டத்தில்
நவரை
பருவத்தில்
பயிரிடப்பட்ட
நெற்பயிர்
மற்றும்
தோட்டக்கலை
பயிர்களான
வாழை,
கத்திரி
பயிர்களை
காப்பீடு
செய்ய
வரும்
ஜன.
31ம்
தேதி
கடைசி
நாளாகும்.
இதேபோல, வெண்டைப் பயிறுக்கு பிப்.15-ஆம் தேதியும், கரும்பு பயிருக்கு மார்ச் 15-ஆம் தேதியும் கடைசி நாளாகும். விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும் பொது, ஒரு சா்வே எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்டவா்கள்
பதிவு
செய்தாலோ
அல்லது
சாகுபடி
செய்யப்பட்ட
பரப்பை
விட
கூடுதலாக
பதிவு
செய்தாலோ
காப்பீடு
திட்ட
வழிகாட்டுதல்
அடிப்படையில்
பதிவுகள்
நீக்கம்
செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ்
பதிவு
செய்யும்
போது,
முன்மொழிவு
விண்ணப்பத்துடன்,
பதிவு
விண்ணப்பம்,
கிராம
நிர்வாக
அலுவலா்
வழங்கும்
அடங்கல்,
இ–அடங்கல் , விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின்
நகல்,
ஆதார்
அட்டை
மற்றும்
பயிர்
காப்பீட்டுத்
தொகையில்
1.5 சதவீதத்
தொகையும்,
ஓராண்டு
பயிர்கள்
மற்றும்
வணிகப்
பயிர்களுக்கு
5 சதவீத
தொகையையும்
பங்களிப்பாக
செலுத்த
வேண்டும்.
மேலும்,
நவரை
பருவ
நெற்பயிருக்கு
ஏக்கருக்கு
ரூ.495,
கரும்பு
பயிருக்கு
ஏக்கருக்கு
ரூ.
2,730, பயிர்
காப்பீட்டுக்
கட்டணமாக
செலுத்த
வேண்டும்.
இதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளில்
பெற்றுக்
கொள்ளலாம்.
மேலும்,
தகவல்களுக்கு
வட்டார
வேளாண்
உதவி
இயக்குநா்,
வேளாண்
அலுவலா்
அல்லது
தொடக்க
வேளாண்
கூட்டுறவு
சங்கங்களை
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


