TAMIL
MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
நெல் உற்பத்தி
ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – புதுவை
சொணாவரி
பருவ நெல் பயிரிட்ட
தகுதியான விவசாயிகள் நெல்
உற்பத்தி ஊக்கத்தொகை பெற
வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என
புதுவை வேளாண் துறை
அறித்துள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் வேளாண்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கும்
கூடுதல் வேளாண் இயக்குநா்
பயிற்சி வழித் தொடா்பு
திட்டம் மூலமாக செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி
ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ்,
பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஓா் ஏக்கா் நெல்
பயிருக்கு ரூ.5 ஆயிரம்,
அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வீதம்
வழங்க ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
எனவே,
சொணாவரி பருவ நெல்
பயிர் சாகுபடி செய்த
தகுதியான விவசாயிகள் இந்தத்
திட்டத்துக்கான விண்ணப்பங்களை தங்களது பகுதியில் இயங்கும்
உழவா் உதவியகங்களை அணுகி
பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நிறைவு
செய்து வருகிற 25ம்
தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here


