உழவர் கடன்
அட்டை விவசாயிகளுக்கு அழைப்பு
உழவர்
கடன் அட்டை பெற,
விவசாயிகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம்
மாவட்டத்தில், 2 லட்சத்து,
74 ஆயிரத்து, 82 விவசாயிகள், பிரதமரின்
கவுரவ நிதி திட்டம்
மூலம், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 2,000 வீதம், ஆண்டுக்கு,
6,000 ரூபாய் கவுரவ நிதியாக
பெற்று வருகின்றனர். ஆனால்,
சேலம் மாவட்டத்தில், ஒரு
லட்சத்து, 57 ஆயிரத்து, 475 விவசாயிகளுக்கு மட்டும், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளின் மூலம், உழவர்
கடன் அட்டை பெறப்பட்டுள்ளது.
அதனால்,
பிரதமரின் கவுரவ நிதி
திட்டத்தில் பயன்பெறும் அனைத்து
விவசாயிகளும், நிதி
பெறும் வங்கியை அணுகி,
உழவர் கடன் அட்டை
படிவத்தை பூர்த்தி செய்து,
நில உரிமைக்குரிய பட்டா,
அடங்கல், ஆதார் விபரங்களை
சமர்ப்பித்து, உழவர்
கடன் அட்டையை எளிதில்
பெற்றுக்கொள்ளலாம். பி.எம்.கிஷான்
இணையதளத்திலும், உழவர்
கடன் அட்டை படிவத்தை
பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.