TAMIL MIXER EDUCATION- ன் முக்கிய செய்திகள்
போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு –
மெட்ரோ ரயில் நிறுவனம்
எச்சரிக்கை
சமூக
வலைதளங்களில் பரவி
வரும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி
ஏமாறவேண்டாம் என,
சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு முகாம் நடப்பதாக, இரண்டு
வாரங்களாக, ‘வாட்ஸ் ‘ஆப்‘
போன்ற சமூக வலை
தளங்களில் வேகமாக தகவல்
பரவி வருகிறது.
இதை
நம்பி பலரும் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.இது குறித்து
சென்னை மெட்ரோ ரயில்
நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனத்தில் பல்வேறு
துறைகளின் கீழ், பல்வேறு
பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில்
ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின்,
அதற்கான முன் அறிவிப்பு,
சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனத்தின், www.chennaimetrorail.org என்ற
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதைத்
தவிர தினசரி நாளிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
எனவே,
இவற்றைத் தவிர வேறு
எந்தவொரு இணையதளத்திலும் சென்னை
மெட்ரோ ரயில் நிறுவன
வேலைவாய்ப்பு செய்திகளை
யாரும் நம்ப வேண்டாம்.
இந்நிறுவனத்தில் பல்வேறு
வேலை வாய்ப்புகள் இருப்பதாக,
இணையதளத்தில் பொய்யான
செய்திகளை வெளியிடுவோர் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.