TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் மின் கட்டணம் குறித்து முறைகேடுகள் நடைபெறுவதால்
ஆதாருடன்
மின்
இணைப்பு
எண்ணை
இணைக்க
வேண்டும்
என
மின்சார
வாரியம்
அறிவிப்பு
வெளியிட்டது.
மேலும்
பல
சிறப்பு
முகாம்கள்
மூலமாக
இந்த
பணி
வேகமாக
நடைபெற்றது.
கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் இது குறித்த பணிகள் தொடங்கப்பட்டது.
மேலும்
முதற்கட்டமாக
இந்த
பணிகளை
மேற்கொள்ள
டிசம்பர்
31ம்
தேதி
வரை
கால
அவகாசம்
வழங்கப்பட்டது.
இன்னும் சிலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை
என்பதால்
ஜனவரி
31 வரை
கால
அவகாசம்
நீட்டிக்கப்பட்டது.
மேலும் பிரிவு அலுவலகங்களில்
மட்டுமின்றி
ஒவ்வொரு
பகுதிகளிலும்
சிறப்பு
முகாம்கள்
நடத்தி
மின்
இணைப்புடன்
ஆதாரை
இணைக்கும்
பணி
நடைபெற்று
வருகிறது.
இதுவரை
2 கோடியே
11 லட்சம்
பேர்
ஆதார்
எண்ணை
இணைத்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் இன்னும் 50 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர்.
அதனால் மேலும் சில நாட்கள் கால அவகாசம் நீடிக்க வாய்ப்புள்ளதாக
தகவல்
வெளியாகி
இருக்கிறது.
இது
குறித்த
அறிவிப்பை
அமைச்சர்
30ம்
தேதி
வெளியிடுவார்
எனவும்,
மின்
இணைப்புடன்
ஆதாரை
இணைக்காதவர்கள்
மின்
கட்டணம்
செலுத்த
முடியாது
என்பது
தவறான
செய்தி
என
மின்
வாரிய
உயர்
அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.