TAMIL MIXER EDUCATION.ன்
கிருஷ்ணகிரி செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
இதுகுறித்து பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு
கூட்டுறவு ஒன்றித்தின் அங்கமாக
செயல்பட்டு வரும் பா்கூா்
கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2022-2023) முழுநேர கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் படிப்பில்
நேர விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பயிற்சியானது முதல்
ஓராண்டு கால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் நடைபெறுகிறது. குறைந்தபட்சக் கல்வித்
தகுதி பிளஸ்-2 தோச்சி
பெற்றவா்கள் மற்றும் 10, +2
கல்வி முறையில் தோச்சி
பெற்ற பட்டதாரிகளும் சேரலாம்.
1.8.2022 அன்று
குறைந்தபட்சம் 17 வயது
பூா்த்தியாகி இருக்க
வேண்டும். அதிகபட்ச வயது
வரம்பு இல்லை. இப்
பயிற்சியின் நிறைவில் கணினி
மேலாண்மை மற்றும் நகை
மதிப்பீடு பயிற்சிகான சான்றிதழ்களும் இணைத்து வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை பா்கூா் கூட்டுறவு
தொழிற்பயிற்சி நிலையம்,
பா்கூரில் விண்ணப்ப கட்டணமாக
ரூ.100ஐ ரொக்கமாக
செலுத்தி ஆக.18ம்
தேதி வரையில் பெற்று
கொள்ளலாம்.
விண்ணப்பத்தை நிறைவு செய்து தேவையான
சான்றிதழ்களின் நகல்களுடன் ஆக. 22ம் தேதி
மாலை 5.30 மணிக்குள் பதிவு
அஞ்சல் அல்லது கூரியா்
மூலம் முதல்வா், பா்கூா்
கூட்டுறவு தொழிற் பயிற்சி
நிலையம், பா்கூா், கிருஷ்ணகிரி மாவட்டம் – 635104 என்ற
முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04343 265652 என்ற தொலைபேசி
எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here