Join Whatsapp Group

Join Telegram Group

பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – சேலம்

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
சேலம்
செய்திகள்

பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிப்புசேலம்

சேலம்
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில், அஞ்சல் வழி
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு
சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு
பயிற்சி பெறாத பணியாளா்களுக்கான அஞ்சல் வழி
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி நாச்சியப்பா கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆக. 12ம் தேதி
வரை பெற்றுக் கொள்ள
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக.
17
ம் தேதி மாலை
5.30
மணிக்குள் சமா்ப்பித்திட வேண்டும்.
சோக்கைக்கான கல்வித் தகுதி
10
ம் வகுப்பு தோச்சி
என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு
சங்கங்களில் பணிபுரியும் அனைத்து
நிரந்தரப் பணியாளா்களும் வயது
வரம்பின்றி இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள் ஆவா்.
இப்பயிற்சிக்கான கட்டணம்
ரூ. 15,050 ஆகும்.
அஞ்சல் வழி கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர கூட்டுறவு நிறுவனப்
பணியாளா்கள் தவிர தனியார்
விண்ணப்பதாரா்களுக்கு அனுமதியில்லை.

இப்பயிற்சியில் சேருபவா்கள் சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை
(516,
கடலூா் பிரதான சாலை,
காமராஜா் காலனி, அம்மாபேட்டை, சேலம்-14) நேரில் அணுகியோ
அல்லது 0427 2240944 என்ற தொலைபேசி
எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Xerox [1 page - 50p Only]