நீட் தேர்வுகளை
எழுதுவதற்கான நேரம்
நீட்டிப்பு
இந்தியா
முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு
மத்திய அரசு சார்பில்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்த
தேர்வுகளை தேசிய நீட்
தேர்வு முகமை நடத்தி
வருகிறது. அதன்படி எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ்.,
சித்தா, ஆயுர்வேதம், யுனானி,
ஓமியோபதி உட்பட இளநிலை
மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை நீட் தேர்வின்
அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
2022-2023ம்
கல்வியாண்டுக்கான இளங்கலை
மருத்துவ படிப்புக்கு நீட்
தேர்வு வருகிற ஜூலை
மாதம் 17-ந் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும், தமிழ்,
ஆங்கிலம், இந்தி உள்பட
13 மொழிகளிலும் நடத்தப்பட இருப்பதாக
தேசிய தேர்வு முகமை
(என்.டி.ஏ.)
அறிவித்து உள்ளது.
இந்த
தேர்வுக்கு ஏப்ரல் 6 முதல்
மே 6 ஆம் தேதி
வரை ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம் என்றும்,
தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த
மே மாதம் 7ஆம்
தேதி கடைசி நாள்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
ஆண்டு நீட் தேர்வின்
போது கொரோனாவை கருத்தில்கொண்டு 200 வினாக்கள் கொடுத்து 180 வினாக்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு
வழங்கப்பட்டது. அனால்
இந்தாண்டு 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில், 20 நிமிடம்
கூடுதலாக வழங்கப்படுகிறது. தேர்வு
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி
மாலை 5.20 மணிக்கு நிறைவு
பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in
என்ற இணையதளங்களில் தெரிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


