TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழக அரசு
வேலைவாய்ப்பு புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் புதுப்பிக்க கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது. 2017 முதல்
2019 வரை புதுப்பிக்க தவறியர்களுக்கு 25.08.2021 வரை கால
அவகாசம் அளித்துள்ளது. மேலும்
இணையத்தில் புதுப்பிப்பதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி,
கல்லூரி படிப்புகளை முடிக்கும் மாணவ–மாணவிகள் அரசு
வேலைக்காக தங்கள் கல்வித்
தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம்.
பள்ளி மாணவர்கள் 10, 12 கல்வித்தகுதி பதிவுகளை பள்ளியிலேயே முடித்து
விடுகிறார்கள். அவர்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்வதில்லை. தமிழகத்தில் அரசு
பணி பெற அரசின்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மூன்று ஆண்டிற்கு ஒரு
முறை வேலைவாய்ப்பு பதிவை
புதுப்பிக்க வேண்டும்.
வேலை
வாய்ப்பில் பதிவு செய்திருந்தால் முன்னுரிமையின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். இணையத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கோ சென்று பதிவு செய்து
புதுப்பித்து கொள்ளலாம்.
தற்போது வேலைவாய்ப்பு பதிவை
தவிர விட்டவர்களுக்கு அரசு
கால அவகாசம் அளித்துள்ளது. கடந்த 2017 முதல் 2019 வரை
வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியர்களுக்கு 25.08.2021 வரை
புதுப்பித்துக் கொள்ளலாம்
என அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமும்
புதுப்பித்து கொள்ளலாம்.
கூடுதல்
கல்வித் தகுதிகளையும் பதிவுதாரர்களே ஆன்லைனில் பதிவேற்றம் செய்து
விடலாம். மாவட்டத்திற்குள் முகவரி
மாற்றம் ஏற்பட்டால் அதையும்
ஆன்லைனில் திருத்தம் செய்து
கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு
செய்யும் போது கவனமும்,
பொறுமையும் மிகவும் அவசியம்.
இணையம் மூலம் வேலை
வாய்ப்பை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில்
புதுப்பிக்க https://tnvelaivaaippu.gov.in/Empower/
என்ற இணையதளத்தில், உங்கள் வேலை வாய்ப்பு
பதிவு எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு
செய்து கொள்ள வேண்டும்,
பிறகு அதை அப்டேட்
செய்து கொள்ள வேண்டும்,
அதை கிளிக் செய்ததும்
புதுப்பிப்பு என்ற
விருப்பம் தோன்றும். அதை
கிளிக் செய்ததும் விண்ணப்பதாரர் புதுப்பிப்பு என்ற
விருப்பம் தோன்றும், அடுத்து
வரும் பக்கத்தில் அவற்றில்
தங்களுடைய பதிவு எண்,
தற்போதைய பதிவு நாள்,
பதிவாளரின் பெயர் போன்ற
விவரங்களை பூர்த்தி செய்து
கீழே கொடுக்கப்பட்டுள்ள Renewal என்ற
பட்டனை கிளிக் செய்ய
வேண்டும்.