தொழிலாளர் விவரம்
பதிவுக்கு அவகாசம்
நீட்டிப்பு
மத்திய
அரசின் வேலை வாய்ப்பு
அமைச்சகத்தின் தேசிய
தரவு அடிப்படையில் அமைப்பு
சாரா தொழிலாளர்களின் விவரங்களை
e-SHRAM/NDUW Portal வாயிலாக பதிவு செய்ய
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக
நிலக்கோட்டை பகுதியில் நடந்த
சிறப்பு முகாமில் 120 தொழிலாளர்களின் விவரம் பதிவு செய்து,
அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இது
தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த
குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தேசிய தரவு தளத்தில்
அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்து
இலவசமாக அடையாள அட்டை
பெறலாம். இதற்காக, டிச.31
வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ESI., PF., மற்றும் அமைப்பு
சார்ந்த தொழிலாளர்களை தவிர,
மற்ற தொழிலாளர்கள் சிறப்பு
பதிவு முகாமில் பங்கேற்று
மத்திய அரசின் பயன்பாடுகளை பெறலாம்.