தமிழகத்தில் 1591 ஆசிரியர்களுக்கு 3 வருடங்கள் பணிக்காலம் நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3வது
அலையின் தாக்கம் குறைந்ததை
அடுத்து பல்வேறு தளர்வுகளை
தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிலும்
குறிப்பாக அனைத்து பள்ளிகளும் கடந்த பிப்ரவரி 1ம்
தேதி முதல் திறக்க
அனுமதி வழங்கப்பட்டது. தற்போது
அனைத்து பள்ளிகளும் திறக்கப்படு வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நேரடி முறையில்
வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆசியர்களின் பணியிடத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப முடிவு
செய்யப்பட்டது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அந்த
அடிப்படையில் முதுகலை
ஆசிரியர் பணி இடத்திற்கான தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், முதுகலை ஆசிரியர்,
உடற்கல்வி ஆசிரியர் நிலை-1,
கணினி ஆசிரியர் நிலை
1க்கான ஆசிரியர் தகுதி
தேர்வு உள்ளிட்ட பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டது. அதனை
தொடர்ந்து அரசு பள்ளிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில்
வெளியாக இருக்கிறது. கடந்த
2012-2013ம் கல்வியாண்டில் நகராட்சி
மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக
அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான பணிக்காலம் முடிவடையவுள்ள நிலையில்
அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த
அறிவிப்பில், தமிழகத்தில் 2012-2013ம்
கல்வியாண்டில் கூடுதலாக
1591 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த
1591 ஆசிரியர்களுக்கு 3 வருடங்கள்
பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அவர்கள் 2024ம்
ஆண்டு அக்டோபர் 31ம்
தேதி வரை பணியில்
இருப்பார்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

