HomeBlogதமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய சேவைகள் தொடரும் – மின்சார வாரியம்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய சேவைகள் தொடரும் – மின்சார வாரியம்

 

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய சேவைகள்
தொடரும்மின்சார வாரியம்

தமிழகத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் சட்டமன்ற
தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல்
மாதம் 6 ஆம் தேதி
நடைபெற உள்ளது. இதற்கான
வாக்கு எண்ணிக்கை மே
மாதம் 2 ஆம் தேதி
நடைபெற உள்ளது. தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற
இன்னும் 1 வாரம் மட்டுமே
உள்ளதால் அனைத்து அரசு
அலுவலகங்களும் தேர்தல்
ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
வந்துள்ளது.

ஏப்ரல்
6
ஆம் தேதி அனைவரும்
வாக்களிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் தொழிலாளர் நலத்துறை,
அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும்
என உத்தரவிட்டிருந்தது. அன்று
மின்சார வாரிய ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக
மின்சார வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் மக்களின்
அன்றாட வாழ்க்கை பாதிக்காத
அளவில் அத்தியாவசிய சேவை
அலகுகள் மற்றும் மின்விநியோக அமைப்புகள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது
குறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு
மின்சார வாரியம் அனைத்து
தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளது. இந்த
ஆண்டு நடைபெற உள்ளது
தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற
நோக்கில் பல்வேறு விதமான
விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular