பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப்
போட்டிகள்
நாட்டின்
75 ஆவது ஆண்டு சுதந்திர
தின விழா கொண்டாட்டமாக கோவை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
6, 7, 8 ஆம்
வகுப்பு மாணவா்கள் மகாத்மா
காந்தியும், ஒழுக்க நெறியும்
என்ற தலைப்பில் 100 சொற்களுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுத
வேண்டும்.
9, 10 ஆம்
வகுப்பு மாணவா்கள் மகாத்மா
காந்தியும், அகிம்சையும் என்ற
தலைப்பில் 200 சொற்களுக்கு மிகாமலும்,
11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள்
விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா
காந்தி என்ற தலைப்பில்
300 வார்த்தைகளுக்கு மிகாமல்
கட்டுரைகளை எழுத வேண்டும்.
கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். போட்டியில் பங்குபெறும் மாணவா்கள் தங்களது பெயா்,
பயிலும் வகுப்பு, பள்ளியின்
பெயா், கைப்பேசி எண்
மற்றும் வீட்டு முகவரியை
குறிப்பிட வேண்டும்.
மாணவா்கள்
தாங்கள் எழுதிய கட்டுரைகளை நவம்பா் 24 ஆம் தேதி
மாலை 5 மணிக்குள் நேரு
விளையாட்டுரங்க வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியரிடம் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ
சமா்ப்பிக்கலாம்.
போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து
மாணவா்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படும்.