HomeBlogதமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி
- Advertisment -

தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி

Essay competition ahead of Tamil Nadu tomorrow

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்

தமிழ்நாடு நாளை
முன்னிட்டு
கட்டுரைப்
போட்டி

தமிழ்
வளர்ச்சித்துறை சார்பில்,
பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு, கட்டுரைப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் ஜூலை
18
ம் தேதி, தமிழ்நாடு
நாளாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்,
பள்ளி மாணவர்களுக்கு, கட்டுரை,
பேச்சுப்போட்டி நடத்தி
பரிசுகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

கோவை
மாவட்டத்தில், ஜூலை
6
ம் தேதி, ராஜவீதி
அரசு மகளிர் ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தில் காலை
10.00
மணி முதல், பள்ளி
மாணவர்களுக்கான கட்டுரை,
பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.போட்டிகளில், ஆறாம்
வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை படிக்கும்
மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

கலந்து
கொள்ள விரும்பும் மாணவ,
மாணவியர், தங்கள் பள்ளி
தலைமையாசிரியர் பரிந்துரைக்கடிதம் பெற்று வர
வேண்டும். ஒரு பள்ளியில்
இருந்து ஒரு போட்டிக்கு, இரண்டு மாணவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்.போட்டிக்கு, தமிழ்நாடு உருவான வரலாறு;
மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களும்; தமிழ்நாட்டுக்காக உயிர் கொடுத்த
தியாகிகள்; பேரறிஞர் அண்ணா
பெயர் சூட்டிய தமிழ்நாடு;
சங்கரலிங்கனாரின் உயிர்
தியாகம் என்பன உள்ளிட்ட
தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல்
பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்,
இரண்டாம் பரிசு 7 ஆயிரம்
ரூபாய், மூன்றாம் பரிசு
5
ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.போட்டி நடக்கும் நாளிலேயே
முடிவுகள் அறிவிக்கப்படும். இப்போட்டியில் கோவை மாவட்ட மாணவ,
மாணவியர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -