போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் மாணவர் சேர்க்கை 500 லிருந்து 1400 ஆக உயர்வு: அமைச்சர் பொன்முடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் பொன்முடி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டம் ரூ.21 கோடியில் கட்டப்படும். ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.14 கோடியில் கட்டப்படும். சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.21 கோடியில் கட்டப்படும்.
அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் பயிலும் மாணவர்களுக்கு தனி ஓய்வறை ஒன்று தலா ரூ. 5 லட்சம் வீதம் 171 அரசு கல்லூரிகளில் ரூ.8.55 கோடியில் கட்டப்படும். கோயம்பத்தூர், சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரணியல் ஆய்வகம் ரூ.3 கோடியில் நிறுவப்படும். திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சாரம் வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூ.3 கோடியில் நிறுவப்படம்.
காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூ.2 கோடியில் நிறுவப்படும். GATE,IES,CAT,GMAT,GRE,IELTS மற்றும் TOEFL உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆகி உயர்த்தப்படும். இதற்கு ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்படும். அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.2 கோடியில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow