தூயதமிழில் பேசுவோரை
ஊக்கப்படுத்தும்–தூய
தமிழ்ப் பற்றாளர் விருது-2021 பெற
விண்ணப்பிக்கலாம்
தமிழ்
மொழியின் சிறப்பினை போற்றுவதற்கு, மக்களிடையே தமிழ் மொழியின்
சிறப்பை கொண்டு சேர்க்கும் வகையில், தமிழக அரசின்
அகர முதலித் திட்ட
இயக்கம் சார்பில் தமிழ்
பற்றாளர் விருது வழங்க
அறிவிப்பு ஒன்றை அகர
முதலித் திட்ட இயக்கத்தின் இயக்குனர் தங்க.காமராசு
வெளியிட்டார். அதில்
குறிப்பிட்டுள்ளவை, நடைமுறை
வாழ்க்கையிலும், பேச்சு
வழக்கிலும் பிற மொழி
கலப்பில்லாமல் தூய
தமிழில் பேசுவோரை ஊக்குவிக்க தூய தமிழ்ப் பற்றாளர்
விருதினை அகர முதலித்
திட்ட இயக்கம் சார்பில்
வழங்கப்பட உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
விருதுக்கு தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 37 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினை தமிழ்
அகராதியியல் நாள் விழாவின்
போது வழங்கப்படும். இந்த
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தலா
ரூ.20 ஆயிரம் ரொக்கமும்,
பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு
சார்பில் ரூ 7.40 லட்சம்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதினை பெற தகுதி உடையவர்கள் வருகிற ஜனவரி 29.ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.sorkuvai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இல்லையென்றால் அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டியவர்கள்:
இயக்குனர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கம்,
நகர் நிருவாக அலுவலக வளாகம்,
முதல் தளம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
எம்,ஆர்,சி நகர்,
சென்னை-28
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இந்த விருதினை பெற தொலைபேசி வாயிலாக நேர்காணல் நடத்தப்பட்டு, போட்டியில் பங்கேற்றவர்கள் பேச்சு, உச்சரிப்பு, பிழை இல்லாமல் பேசுவது போன்ற விஷயங்களை ஆய்வு செய்து விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


