TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பிற்படுத்தப்பட்ட வகுப்பை
சார்ந்தவர்களுக்கு கல்விக் கடன்
பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்
முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி
பயில கல்விக் கடன்
வழங்குகிறது.
மத்திய
சமூக நீதி மற்றும்
அதிகாரம் வழங்கல் துறையின்
கீழ் தேசிய பிற்பட்ட
வகுப்பினர் Finance
and Development Corporation நிறுவனம் செயல்படுகிறது.
இந்த
நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப
வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம் வரை மற்றும்
நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55
ஆயிரம் வரை உள்ள
பிற்பத்தப்பட்ட வகுப்பு
மாணவர்களுக்கு முழு
நேர தொழிற்கல்வி அல்லது
தொழில்நுட்பக் கல்வி
பயில கடன்களை அளிக்கிறது.
பொறியியல்,
மருத்துவம், நிர்வாகம், ஐ.டி.,
சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இந்த
கல்விக் கடன் பெற
விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20
லட்சமும கல்விக் கடனாக
வழங்கப்படும்.கல்விக்
கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி
வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: www.nbcfdc.org.in
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


