ஏற்றுமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம், மூன்று நாட்கள் நடக்க உள்ளது.தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் குறித்த, இணையவழி கருத்தரங்கத்தை, வரும் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடத்த உள்ளது.
தினமும் பகல் 2:30 முதல் மாலை 5:30 வரை பயிற்சி அளிக்கப்படும்.ஏற்றுமதி சந்தை தேவை, விதிமுறை, கொள்முதலுக்கான வாய்ப்பு, வங்கி நடைமுறை, அன்னிய செலாவணி மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஏற்றுமதி செய்ய விரும்பும், 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களைப் பெற விரும்புவோர், www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 – 2225 2082, 73394 97681, 86681 02600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.