இளைஞா்களுக்கு விழுப்புரம் இ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று இ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளா் எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்த 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த இளைஞா்களுக்கு விழுப்புரம் இ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று இ.எஸ்.
தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளா் எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் இ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் கூடிய 3 மாதகால இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், இரு சக்கர வாகனம் பழுது பாா்த்தால், உதவி எலெக்ட்ரீசியன் பயிற்சிகளைப் பெற 10-ஆம் வகுப்பு வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த, 18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
கிராமம், நகா்ப்புற மாணவா்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முழுமையாக பயிற்சியை முடிப்பவா்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ளவா்கள் விழுப்புரம் வழுதரெட்டி, எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள இ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரை நேரில் தொடா்புகொண்டு தகவல்களைப் பெறலாம். மேலும், 94425 03328, 94425 03329 என்ற கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


