Join Whatsapp Group

Join Telegram Group

இ-பாஸ் அல்ல. இ-பதிவு போதும்! தமிழக அரசு விளக்கம்!!

By Bharani

Updated on:

 202010290140191229 Epass not required anymore for interstate travel says govt SECVPF Tamil Mixer Education

அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு சான்றிதழ் போதும் என்றும், இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிதாக தமிழகத்திற்குள் இ-பதிவு அனுமதி தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்குமாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மே-17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால் https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu – E Pass – Apply Online – Step by Step

இ-பதிவு என்பது எங்கே போகிறோம் என்பதை காரணம் மற்றும் ஆவணத்துடன் பதிவு செய்து விட்டு சான்றிதழுடன் செல்வது. அதுவே இ-பாஸ் என்றால் விண்ணப்பித்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும்.

எனவே இ-பாஸ் நடைமுறை இல்லை என்றும் இ-பதிவு போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]