கன்னியாகுமரி செல்வதற்கு E-Pass கட்டாயம்
தமிழகத்தில் CORONA.வின் இரண்டாவது
அலை கடந்த ஆண்டின்
முதல் அலையை விட
மிக தீவிரமாக இருந்து
வருகிறது. அதிலும் குறிப்பாக
தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் கொரோனா
தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
நேற்று தமிழகத்தில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனா
நோய்த்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பல
தடுப்பு நடவடிக்கைள் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேபோல்
தமிழகத்தில் இன்று (ஏப்ரல்
10) முதல் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொரோனா
தொற்றின் வேகம் குறையவில்லை எனில் தமிழகத்தில் இரவு
நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலை குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு
கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி, மாவட்ட
ஆட்சியர் ஓர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதன்படி:
தமிழகத்தில் சுற்றுலா தலமாக காணப்படும் கன்னியாகுமரியில் அதிக
அளவிலான மக்கள் வந்து
செல்கிறார்கள். இதனால்
கொரோனா பாதிப்பு அதிகரிக்க
நேரிடும். எனவே நாளை
(ஏப்ரல் 11) முதல் வேறு
மாவட்டங்களில் இருந்து
கன்னியகுமார் மாவட்டத்திற்கு வருவதற்கு இ பாஸ்
கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் E-Pass பெற எளிய முறை – Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


