
ஐஐடி மெட்ராஸ் அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்பத்தில் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, ஐஐடி மெட்ராஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 ஆண்டுகளில் உலகளாவிய இ-காமர்ஸ் வர்த்தகம் 7.97 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும்.இந்தத் துறையில் ஆண்டு வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும்.இது பயிற்சி பெற்ற இ-காமர்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (கிளவுட் டெவலப்பர்கள்) அதிக தேவையை உருவாக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதை மனதில் வைத்து, ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன், இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சியை (Salesforce B2C Commerce Cloud Training) வழங்குவதற்காக, அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Codenatives உடன் இணைந்து ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்துள்ளது.
இது 70 மணிநேர ஆன்லைன் பயிற்சி மற்றும் 130 மணிநேர நேரடி நடைமுறை பயிற்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.இதில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நவம்பர் 22 தொடங்குகிறது. https://digitalskills.iitmpravartak.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

