TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
சென்னை ஐஐடியில் ட்ரோன் பயிற்சி
சென்னை ஐஐடி மூலம் அளிக்கப்படும்
விவசாய
ட்ரோன்
கருவி
தொடா்பான
பயிற்சியைப்
பெற்றிட
வேலூா்
மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
இன
மாணவா்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டுவசதி,
மேம்பட்டுக்
கழகம்
(தாட்கோ)
மூலம்
சென்னை
ஐஐடியிலுள்ள
விண்வெளி
ஆராய்ச்சி
மையம்
சாா்பில்,
விவசாயத்
துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
தொடா்பான
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
வளா்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம்
மூலம்
பூச்சிக்கொல்லி
மருந்துகள்,
உரங்கள்
விவசாய
நிலங்களில்
தெளித்து
நடைமுறைப்படுத்தும்
பணி
நாளுக்கு
நாள்
வளா்ச்சி
பெற்று
வருகிறது.
இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தால்
விளை
நிலங்களில்
உள்ள
பயிா்களில்
பூச்சிக்
கொல்லி
நோய்
தாக்குதல்
ஏற்பட்டால்
குறைந்த
நேரத்தில்
அதிக
பரப்பளவில்
(25 முதல்
30 ஏக்கா்
வரை)
மருந்துகளை
தெளிக்க
முடியும்.
இதன்
மூலம்
நாளொன்றுக்கு
ரூ.
10,000 முதல்
ரூ.
15,000 வரை
சம்பாதிக்கலாம்.
தவிர, விவசாய பணியாளா்கள் பற்றாக்குறை காரணத்தாலும்
கிராம
மக்களுக்கு
ட்ரோன்
தொழில்நுட்பத்தை
பயன்படுத்துவதே
இப்பயிற்சியின்
முக்கிய
நோக்கமாகும்.
கல்வி வளாகம், விளை நிலங்களில் என 10 நாள்கள் அளிக்கப்படும்
இந்த
பயிற்சியில்
சேர
18 முதல்
45 வயது
நிரம்பிய
ஆதிதிராவிடா்,
பழங்குடியின
மாணவா்களாக
இருக்கவும்,
10ம்
வகுப்பு,
ஐடிஐ,
டிப்ளமோ
அல்லது
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பில்
தேர்ச்சி
பெற்றிருக்கவும்
வேண்டும்.
மருத்துவரின்
உடல்தகுதி
சான்றிதழ்
உள்ளிட்டவற்றை
சமா்ப்பிக்க
வேண்டும்.
பயிற்சிக்கான
மொத்த
தொகை
ரூ.
61,100 தாட்கோ
மூலம்
வழங்கப்படும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் சிவில் விமான போக்குவரத்து
இயக்குநரகத்தால்
(டிஜிசிஏ)
அங்கீகரிக்கப்பட்ட
ட்ரோன்
ரிமோட்
பைலட்
உரிமத்தை
பெறுவா்.
இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு
செல்லதக்கதாகும்.
இந்தப்
பயிற்சி
பெற்றவா்கள்
சொந்தமாகவோ
அல்லது
தாட்கோ
நிதியுதவி
மூலமாகவோ
ட்ரோன்
கருவிகளை
வாங்கவும்,
உழவன்
செயலி
மூலம்
தங்கள்
சேவைகளை
சந்தைப்படுத்தவும்
முடியும்.
விவசாய ட்ரோன்கள் வாங்கிட வேளாண் துறையில் உள்ள மானியம், கடன் திட்டங்கள் மூலமாகவும், தாட்கோவின் ரூ. 2.25 லட்சம் மானியத்துடன்
வங்கிக்
கடன்
பெறவும்
வழிவகை
செய்யப்படும்.
தகுதியுள்ள ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்,
திருநங்கைகள்
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பித்துப்
பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


