ராமநாதபுரத்தில் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கிராம நாட்டுகோழி வள மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ் செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
சென்னை கால்நடை மருத்துவக்கல்லுாரி விரிவாக்கத்துறை தலைவர் டாக்டர் சுதிப்குமார் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் விஜயலிங்கம் முன்னிலை வகித்தார்.புறக்கடை கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் நாட்டு கோழி வளர்ப்பு குறித்தும், வளர்ப்போர் குழுவாக இணைந்து செயல்பட்டு வருமானம் ஈட்டுவதுகுறித்து விஞ்ஞானிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.பயிற்சிபெற்றவர்களுக்கு கோழிக்கூண்டு, தீவனம், தண்ணீர் வைப்பு கலன்கள், ஒரு மாத வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மையத்தினர், கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.