HomeBlogதமிழக அரசின் பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா? இல்லையா?

தமிழக அரசின் பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா? இல்லையா?

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக அரசின் பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா? இல்லையா

தமிழக அரசு அனைத்து பொதுமக்களும்
பொங்கல்
பண்டிகையை
சிறப்பாக
கொண்டாடும்
வகையில்
ஆண்டுதோறும்
ரேஷன்
கடைகள்
மூலமாக
மக்களுக்கு
பொங்கல்
பரிசை
வழங்கி
வருகிறது.

2023
பொங்கல்
பண்டிகைக்கு
அரசு
வழங்க
இருக்கும்
பரிசு
குறித்து
மக்கள்
மத்தியில்
அதிக
எதிர்பார்ப்பு
நிலவி
வந்தது.
இந்நிலையில்,
ஜனவரி
2
ம்
தேதி
முதல்
பொங்கல்
பரிசாக
அனைத்து
அரிசி
கார்டுதாரர்கள்
மற்றும்
இலங்கை
வாழ்
தமிழர்கள்
குடியிருப்பு
முகாம்களில்
வசிக்கும்
குடும்பத்தினருக்கும்
தலா
1
கிலோ
பச்சரிசி,
சர்க்கரை
உடன்
ரூ.1,000
அளிக்க
உள்ளதாக
முதல்வர்
அறிவித்துள்ளார்.

வழக்கமாக நேரடியாக மக்கள் கைகளில் அளிக்கப்படும்
தொகையானது,
இம்முறை
ஆதார்
அட்டையுடன்
இணைக்கப்பட்டுள்ள
வங்கி
கணக்குகளில்
செலுத்தப்படும்
என்று
அரசு
அறிவித்துள்ளது

இதற்காக
நடத்திய
ஆய்வுகளில்
தமிழகத்தில்
14,84,582
பேர்
ஆதார்
எண்ணுடன்
வங்கி
கணக்கு
எண்ணை
இணைக்காமல்
இருப்பது
கண்டறியப்பட்டு,
அவர்களில்
வங்கி
கணக்கு
உள்ளவர்கள்
ஆதாருடன்
இணைக்கவும்,
வங்கி
கணக்கு
இல்லாதவர்களுக்கு
கூட்டுறவு
வங்கிகளில்
ஜீரோ
பேலன்ஸ்
கணக்கு
தொடங்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உங்கள் ஆதாருடன் எந்த வங்கியின் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது
என்பதையும்,
வேறு
வங்கி
கணக்கு
எண்ணை
எவ்வாறு
இணைக்க
வேண்டும்
என்றும்,
உங்கள்
ரேஷன்
கார்டு
இதற்கு
தகுதியானது
தானா
என்பதை
அறிந்து
கொள்ளும்
வழிமுறைகள்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • முதலில், https://bit.ly/AadhaarSeedingStatus
    என்ற
    இணையதளத்திற்கு
    செல்ல
    வேண்டும்.
  • அதில், ஆதார் மற்றும் பேங்க் விவரம் இணைக்கப்பட்டுள்ளதை
    சரி
    பார்க்கும்
    பக்கம்
    திறக்கும்.
  • அதில், உங்கள் ஆதார் எண் மற்றும் captcha-வை பதிவிட்டு, வரும் OTP உள்ளிட வேண்டும்.
  • உங்கள் ஆதாரில் எந்த வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டுள்ளது
    என்பது
    திரையில்
    காண்பிக்கப்படும்.
    இந்த
    வங்கி
    கணக்கில்
    தான்
    உங்கள்
    பொங்கல்
    பரிசு
    ரூ.1,000
    டெபாசிட்
    செய்யப்படும்.
  • அந்த திரையில் எந்த விவரமும் காட்டப்படவில்லை
    என்றால்,
    நமது
    கணக்கு
    உள்ள
    வங்கிக்கு
    சென்று
    ஆதார்
    எண்ணை
    பதிவு
    செய்ய
    வேண்டும்.
    இந்த
    கணக்கில்
    அரசு
    பணம்
    செலுத்தும்.
  • மேலும், வேறு வங்கியின் கணக்கு எண்ணை ஆதாரில் பதிவு செய்தால், அந்த கணக்கிற்கு பணம் செலுத்தப்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular