வீண் வதந்திகளை
நம்ப வேண்டாம், ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை – தமிழக
சுகாதாரத் துறை செயலர்
சென்னை கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உலகம்
முழுவதும் கரோனா தொற்று
தற்போது வேகமாக பரவிவருகிறது. ஆனால், தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர்
ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் சராசரியாக 1,000 பேருக்கு பரிசோதனை
செய்தால், 3 பேருக்கு தொற்று
உறுதியாகிறது. எனவே,
கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான அவசியம் தற்போது
இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு
இல்லை. வீண் வதந்திகளை
நம்பவேண்டாம். தமிழகத்தில் கவலைப்பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட
வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
சென்னை
ஐஐடியில் கரோனா தொற்றால்
ஏற்கெனவே 79 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 32 பேருக்கு
தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம்
தொற்று பாதிப்பு 111 ஆக
அதிகரித்துள்ளது. அனைவரும்
நலமுடன் உள்ளனர். 7,490 பேரில்
3,080 பேருக்கு இதுவரை பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது
ஐஐடியில்
மேலும் 2 நாட்களுக்கு தொற்று
பாதிப்பு அதிகரிக்கும். மக்கள்
பதற்றம் அடைய தேவையில்லை. பொது இடங்களுக்குச் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து
தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.