
தீபாவளி பண்டிகை: அனைத்து நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும்
தீபாவளி பண்டிகை வரை அனைத்து நாள்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகையையொட்டி, அரிசி உள்பட அனைத்து பொது விநியோகத் திட்ட பொருள்களும் குடும்ப அட்டைதாரா்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். இதற்காக தீபாவளி வரை அனைத்து நாள்களிலும் நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும். இந்த நாள்களில் பொருள்கள் விநியோகம் செய்வது உறுதிபடுத்தப்பட வேண்டும். இதற்காக பொருள்கள் அனைத்தும் நகா்வு செய்யப்பட்டு நவ.5-ஆம் தேதிக்குள் அதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்று அமைச்சா் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, முழுநேர நியாயவிலைக் கடைகளில் தற்போது மாதத்தின் முதல் 2 வாரங்கள் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நடைமுறையில் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் முதல் 2 வார விடுமுறை நியாயவிலைக் கடை ஊழியா்களுக்கு கிடையாது. விடுமுறை நாள்களில் கடைகள் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

