TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்
அட்மா திட்டத்தின் பன்முகத்தன்மை
கண்காட்சி
வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் மரபுசார் பன்முகத்தன்மை
கண்காட்சி
நடத்தப்பட
உள்ளது.
கலெக்டர்அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில்
பல்வேறு
முன்னோடி
விவசாயிகள்
பல்வேறு
சிறப்பு
பண்புகளைக்கொண்ட
பயிர்
ரகங்களை
சாகுபடி
செய்து
வருகின்றனர்.
அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும் அதிக விளைச்சல் தருவதாகவும் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும்
மற்றும்
மருத்துவ
குணம்
கொண்டதாகவும்
உள்ளது.பாரம்பரியமிக்க
உள்ளூர்
பயிர்
ரகங்கள்,
தாவர
மரபியல்
ஆராய்ச்சியாளர்களுக்கு
தேவையான
விரும்பத்
தக்க
புதிய
பயிர்
ரகங்களை
உருவாக்குவதற்கான
வாய்ப்பை
வழங்குகிறது.
சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க
உள்ளூர்
பயிர்
ரகங்களை
கண்டறிந்து,
பகுதிகேற்ற
சிறந்த
ரகங்களை
உருவாக்க
வேண்டும்
என்ற
உயரிய
நோக்கத்தில்
மாவட்டந்தோறும்
இது
குறித்த
கண்காட்சிகள்
ஆண்டிற்கு
3 முறை
நடத்த
அறுவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 21ம்(21.10.2022) தேதி காலை 9.00 திண்டிவனம் வேளாண் அறிவியல் மையத்தில் இக்கண்காட்சி
நடத்தப்பட
உள்ளது.
இதில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்துவது,
வேளாண்
பல்கலைக்கழக
ரகங்களை
காட்சிப்படுத்துதல்,
விவசாயிகள்,
விஞ்ஞானிகள்
கலந்துரையாடல்
பாரம்பரிய
உணவு
திருவிழா,
விவசாயிகள்
பயிற்சி,
மரபியல்
தொழில்நுட்ப
உரை
போன்ற
பல
நிகழ்வுகள்
நடைபெற
உள்ளது.