ராமநாதபுரம் மாவட்ட அளவிலா திறன் போட்டிக்கு பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த, படிக்கும் இளைஞர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல், கலை – அறிவியல், மருத்துவம், அதைசார்ந்த துறைகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படித்த, படிக்கும் மாணவர்கள் தொழிற்துறை பணியாளர்கள் ஆகிய தகுதிவாய்ந்த தனிநபர்கள் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள லியான் நகரில் வருகிற செப்., 2024 ஆண்டு சர்வதேச திறன் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக துவக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்நடக்கிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு tnskills@naanmudhalvan.in என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டி நடைபெறும், என மாவட்ட திறன் மேம்பாடு உதவி இயக்குனர் (பொ) யோகம் தெரிவித்துள்ளார்.