HomeBlogதொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை – April 30 வரை கால அவகாசம்
- Advertisment -

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை – April 30 வரை கால அவகாசம்

 

Distance Education Admission - Deadline till April 30

தொலைதூரக் கல்வி
மாணவர் சேர்க்கைApril
30
வரை கால அவகாசம்

இந்தியாவின் பல்கலைகழக மானியக்குழு (UGC)
என்பது இந்தியாவில் உள்ள
பல்கலை கழகங்களின் கல்வியினை
ஒருங்கிணைப்பது,
மேற்பார்வையிடுவது, கல்வியின்
தரத்தை உறுதி செய்வது
போன்ற பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அரசு பல்கலை
கழகங்களுக்கு தேவையான
மானிய நிதியினை வழங்கும்
பணியையும் செய்கிறது. மேலும்
ஆண்டு தோறும் கல்வி
உதவி தொகை தேவைப்படும் மாணவர்களுக்கான உதவி
தொகையையும் வழங்குகிறது.

UGC-ன்
550-
வது ஆலோசனைக் கூட்டம்
கடந்த மாதம் நடைபெற்றது. அனைத்து பல்கலைக் கழகத்தை
சேர்ந்தவர்களும் ஆலோசனைக்
கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தொலைதூர, இணையவழி
மற்றும் திறந்த நிலை
படிப்புகளில் மாணவர்
சேர்க்கை நடத்திவதற்கு ஏப்ரல்
30
ம் தேதி வரை
அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ்
ஜெயின், அனைத்து உயர்கல்வி
நிறுவனங்களுக்கும் அறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார்.

பல்கலை
மானியக்குழுவின் அறிக்கையில், UGC 550 வது ஆலோசனை
கூட்டத்தில் எழுந்த கோரிக்கையை ஏற்று மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஏப்ரல்
30-
ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்
சேர்க்கை தொடர்பான விவரங்களை
மே 15ம் தேதிக்குள் UGC-க்கு அனுப்பி
வைக்க வேண்டும் என்றும்
உரிய அங்கீகாரம் பெற்ற
படிப்புகளுக்கு மட்டுமே
மாணவர் சேர்க்கை நடத்த
வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -