ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல்
ஆயுள் சான்றிதழ்
புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் நவம்பர்
மாதத்தில், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின்
இருப்பை உறுதி செய்யும்
வழக்கம் நடைமுறையில் உள்ளது.
மிகவும்
வயதான ஓய்வூதியதாரர்கள், நேரில்
சென்று ஆயுள் சான்றிதழை
சமர்ப்பிக்க முடியாமல், ஓய்வூதியம் பெற இயலாமல் போகிறது.
இதனை
தவிர்க்கும் முயற்சியாக, மத்திய
அரசின் ஜீவன் பிரமான்
திட்டத்தில், அஞ்சல் துறையின்
கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி
ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு
வாசலில் டிஜிட்டல் ஆயுள்
சான்றிதழ் வழங்க ஏற்பாடு
செய்துள்ளது.
வருங்கால
வைப்புநிதி நிறுவன ஓய்வூதியதாரர்கள், மத்திய, மாநில
அரசு அல்லது வேறு
எந்த துறைகளில் ஓய்வூதியம் பெறுவோரும், இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.