- தொல்லியல் (Archaeology) என்ற சொல் ஆர்க்கியோஸ் (Archaeos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. ஆர்க்கியோஸ் (Archaeos) என்றால் தொன்மை, லோகோஸ் (logos) என்றால் ஆய்வு, விவாதம், காரணம் அல்லது அறிவியல் என்று பொருள்படும்.
- 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொல்லியல் துறை.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள்
- மாங்காடு, தெலுங்கனூர், கீழ்நமண்டி மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்ட கரிம மாதிரிகளின் அறிவியல் காலக் கணக்கீடு (கி.மு. 2172, 2427, 2450, 2459, 2522, 2953, 3259, 3345) மூலமாக, தொடக்க இரும்புக் காலம் மற்றும் எஃகு உற்பத்தி மையமாக தமிழ்நாடு உலக வரைபடத்தில் இடம்பற்றுள்ளது.
சிவகளை அகழாய்வில் AMS காலக் கணக்கீட்டின் மூலம் பெறப்பட்ட இரும்பின் காலம் கி.மு. 3345 ஆகும். இது இந்தியாவில் இதுவரை பெறப்பட்ட முன்னோடியான இரும்புக் காலக் கணக்கீடு ஆகும்.
இதன் மூலம், 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
- ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட நெல்மணிகள், சிறுதானியங்கள் மூலம், தமிழர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே புஞ்சை மற்றும் நஞ்சை சாகுபடி முறைகள் பற்றி அறிந்திருந்தனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- இரும்புக் காலம் முதல் தொடக்க வரலாற்றுக் காலம் வரை, தமிழ்நாட்டின் 140 தொல்லியல் தளங்களில் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பாணை ஓடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் குறியீடுகள்/கீறல்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அகழாய்வில் மட்டும் சுமார் 5000 குறியீடுகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் அதிக அளவில் குறியீடு பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்ட அகழாய்வுத் தளமாக விளங்குகிறது.
- தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள், சிந்துவெளிப் பண்பாட்டின் பானை ஓடுகளில் உள்ள எழுத்துப் பொறிப்புகளில் 90% மற்றும் சிந்துவெளி முத்திரைகளில் உள்ள குறியீடுகளில் 60% உடன் இணையாக உள்ளன.
தென்னிந்தியாவின் இரும்புக் காலமும் சிந்துவெளிப் பண்பாட்டின் வெண்கல மற்றும் செப்புக் காலமும் சமகாலத்தவை என அண்மைக்கால அகழாய்வுகள் நிரூபித்துள்ளன.
முதலமைச்சர் அவர்கள், சிந்துவெளி குறியீடுகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டு பானை ஓடுகளில் பொறிக்கப்பட்ட குறியீடுகளுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பு மற்றும் இரும்பின் தொன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை 05.01.2025 மற்றும் 23.01.2025 ஆகிய நாட்களில் உலகிற்கு அறிவித்தார்கள்.
- கீழ்நமண்டி அகழாய்வில் ஈமப்பேழைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கரிம மாதிரி கி.மு.1692 என காலக் கணக்கீடு செய்யப்பட்டூள்ளது.
இது, முதன்முறையாக ஈமப்பேழைக்கு காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடத்தக்கது.
- 1630-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழ்நாட்டின் 42 தொல்லியல் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இதன் மூலம், தமிழ்ச் சமூகம் 2700 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு வற்றது என்பது நிரூபிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொன், வெள்ளி, செம்பு, பானை ஓடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
சிவகளையில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு.685 (7 ஆம் நூற்றாண்டு என்று அறியப்பட்டுள்ளது.
- இதுவரை அடையாளம் காணப்பட்ட 239 பாறை ஓவியத் தளங்களில், முதல் கட்டமாக 46 பாறை ஓவியங்கள், செதுக்குக் கீறல் தளங்கள், மற்றும் 92 தங்குமிடங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
- தொல்லியல் மற்றும் வரலாற்று நிலவரைபடத் தொகுதி தயாரிப்புத் திட்டத்தின்கீழ் பழைய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை 115 வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை பராமரித்தல்:
- தமிழ்நாடு பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1966 மற்றும் விதிகள் 1971
- “வரலாற்று நினைவுச்சின்னம்” என்பது: 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடைய, வரலாற்று, தொல்லியல், கலை. முக்கியத்துவம் கொண்ட இடம்.
- இதுவரை 114 வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் 3 தொல்லியல் தளங்கள், மொத்தம் 117 ஐ “பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் என அறிவித்துள்ளது. [இராமலிங்க விலாசம் (இராமநாதபுரமி, மனோரா நினைவுச் சின்னம் (ரபேந்திரராஜபட்டினம், தஞ்சாவூர். தரங்கம்பாடி கவர்னர் மாளிகை (மயிலாடுதுறை]
- ஒன்றிய அரசு தொல்லியல் துறை: தமிழ்நாட்டில் இதுவரை 411 நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்களை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்துள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள்:
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டத்திலுள்ள ஆனையூர் குடைவரை
- கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், ஆத்திவிளை கிராமம் சிவகிரியில் உள்ள முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில். கன்னியாகுமரி மாவட்டம், குறத்தியறையில் உள்ள முற்கால பாண்டியர் கால குடைவரைக் கோயிலைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க ஏதுவாக முன்னிலை அறிவிக்கை அரசால் வெளியிடப்பட்டூள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், விராலூர் மற்றும் ஓணம்பாக்கம் கிராமத்தில் உள்ள சமணர் படுக்கை மற்றும் தீர்த்தங்கரர் சிற்பங்கள்
- கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், திரமலையாம்பாளையம் இதற்கு கிராமத்தில் உள்ள பாறை ஓவியங்கள்
- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் கிராமத்தில் உள்ள கல் இசை மண்டபம், ஊத்துக்குளி வட்டம், புஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் உள்ள நந்தவனக் கிணறு.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 3 கோடி நிதியினை 2024ஆம் நிதியாண்டு முதல் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்து வருகிறது.
முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்:
விருதுநகர் - பாறைக்குளம் கிராமம், மூவரைவென்றான் ஊர், செவல்பட்டி, காளையார்குறிச்சி (புதுப்பட்டி)
திருநெல்வேலி மாவட்டம் பதினாலாம்பேரியில் ஆண்டிச்சிப் பாறை
தொல்லியல் அகழாய்வுகள்:
- இதுவரை 53 தொன்மையான இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 2024ஆம் ஆண்டில், பின்வரும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கீழடி- பத்தாம் கட்டம்:
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி
- ஒன்றிய அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் (2014-15, 2015-16, 2016-17) அதிக எண்ணிகையிலான செங்கல் கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்தது.
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2017-ஆம் ஆண்டு முதல் (2017-18 முதல் 2023-24 வறை விரிவான அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
- மூன்று கரிம மாதிரிகள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவுடைய சமூகமாக இருந்தது என்பதைக் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படுகிறது.
- தொழில் நகரம் மற்றும் வாழ்விபப்பகுதி இருந்திருக்கலாம்.
- பத்தாம் கப்ட அகழாய்வு முதலமைச்சர் அவர்களால் 2024 ஜூன் 18 அன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டது.
- மீன் உருவம் பொறிக்கப்பட்ட சிவப்புப் பூச்சு பூசப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- சுடுமண் ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள், தக்களிகள், காதணிகள், கண்ணாடி மணிகள், அரிய கல் மணிகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள்.
- செம்மைப்படுத்தப்பட்ட தரைத்தளம் மற்றும் கூரை ஓடுகளும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
- பல்வேறு மண்ணடுக்குகளில் கறைநயத்துடன் வனையப்பட்ட பெரிய சேமிப்புக் கலன்கள், கருப்பு-சிவப்பு நிறக் கிண்ணங்கள்
- சுடுமண் வடிகால் குழாய் ஒன்று 110 செ.மீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆறு உறைகளுடன் மிக நேர்த்தியாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது.
ஒவ்வொரு குழாயின் நீளம் 36 செ.மீ, அகலம் 18 செ.மீ; மொத்த நீளம் 174 செ.மீ.
- கொந்தகை
ழடிக்கு அருகே அமைந்துள்ள கொந்தகையில் ஐந்தாம் கட்ட அகழாய்வு 2024இல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6 ஈமத்தாழிகள், 10-க்கும் மேற்பட்ட கருப்பு-சிவப்பு நிறப் பூச்சு பூசப்பட்ட ஈமமட்கலன்கள்
வெம்பக்கோட்டை – விருதுநகர், மூன்றாம் கட்ட அகழாய்வு [சுடுமண் மனித உருவம்]:
- வைப்பாறு ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
- சங்கு வளையல்கள், மணிகள், மோதிரங்கள், சங்கு மூலப்பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், முழுமை பெறாத சங்கு வளையல்கள், உடைந்த சங்கின் பாகங்கள்
- சங்கு வளையல் தயாரிக்கும் தொழிற்சாலை சங்ககாலத்தில் அல்லது வரலாற்றுத். தொடக்கக் காலத்தில் இருந்திருக்கலாம்.
- சதுபவளம், செவ்வந்திக்கல் போன்ற அரிய வகை கல்மணிகள், தந்தத்தினாலான மணிகள், பதக்கங்கள், பகடை, சுடுமண் முத்திரைகள், ஆட்டக்காய்கள்.
- வேணாடு சேரர்கள், மதுரை, தஞ்சாவூர், செஞ்சி நாயக்கர்கள் காலத்தைச் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட செப்புக் காசுகள் மற்றும் தங்கக் காசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- தொடக்க வரலாற்றுக் காலம் முதல் இடைக்காலம் வரை சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன.
கீழ்நமண்டி – இரண்டாம் கட்டம்:
- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம்
- 55 ஏக்கர் பரப்பளவில் 50-க்கும் மேற்பட்ட இரும்புக்கால கல்வட்டங்கள்
- அகழாய்வு புதைவிடம், வாழ்விடம், மற்றும் இரும்பு உருக்கும் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 7 ஈமப்பேழைகள் – 6 முதல் 12 கால்களுடன், நீள்வட்ட வடிவத்துடன், சிவப்பு நிற மட்பாண்ட வகை, கைகளால் வனையப்பட்டவை.
- 63-க்கும் மேற்பட்ட கீறல் குறியீட்டுப் பானை ஓடுகள், இரும்பு உருக்கும் பகுதியிலிருந்து இரும்பு கழிவுகள்
- டாலரைட் கற்செதில்கள், முழுமையடையாத கற்கோடரிகள்
- சிறிய பாறைகளின் மீது, கற்கோடரிகளைப் பளபளப்பாக்க உருவான தேய்ப்பு பள்ளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பொற்பனைக்கோட்டை – இரண்டாம் கட்டம்:
- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்
- செங்கல் கட்டடமைப்புகள்
- இரண்டாம் கட்ட அகழாய்வு முதலமைச்சர் அவர்களால் 18.06.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- கண்ணாடி மணிகள், வளையல்கள், செப்பு ஆணிகள், சுடுமண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், சூதுபவளம், செவ்வந்திக்கல் மணிகள், எலும்பு முனை, செப்புக் காசுகள், சுடுமண்ணாலான காதணிகள், தேய்ப்பு கற்கள்
- தார்பிபோ ஜாடி (Torpedo Jar), கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள், குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருமலாபுரம் – முதலாம் கட்டம்:
- தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம்
- வடமேற்கே 10 கி.மீ ஏதொலைவில் உள்ள சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பெருங்கற்கால இடுகாட்டில். அகழாய்வு
- முதுமக்கள் தாழிகள் மற்றும் கற்பதுக்கையுடன் கூடிய முதுமக்கள் தாழிகள்
- தமிழ்நாட்டில் முதன் முறையாக 13.5 X 10.5 மீட்டர் நீனம் மற்றும் அகலமுடைய கற்பதுக்கையுடன் கூடிய ஈமத்தாழி வகை ஈமச்சின்னம் கண்டறியப்பட்டுள்ளது.
35 கற்பலகைகளால் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது, 15 மீ ஆழம் வரை
கூழாங்கற்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுவரை 38 முதுமக்கள் தாழிகள்: 3 தாழிகளின் மேற்புறத்தில் புடைப்புச்சின்னங்கள்
காணப்படுகின்றன
- கோடரி, ஈட்டி முனை, 3 அம்பு முனைகள், எலும்புகள், வெண்கலக் கிண்ணம், கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள்
- இரும்புக் காலப் பண்பாடு: அதிகளவில் கிடைக்கும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் இரும்புக் கால தொல்பொருட்கள்
சென்னானூர் – முதலாம் கட்டம்:
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம்
- புதிய கற்கால பண்பாட்டுக் கூறு.
- கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், மணிகள், வட்டச் சில்லுகள், பானை வனைப்பான், ஏர்கலப்பையின் இரும்பினாலான கொழுமுனை, இரும்பினாலான அம்பு முனைகள், ஈப்டி முனை, பளிங்கு கல்மணி, சுடுமண்ணாலான முத்திரைகள், விளக்குகள்.
- புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய வழவழப்பான மெருகேற்றப்பட்ட கற்கோடரி, எலும்பினாலான கிழிப்பான் மற்றும் புதிய கற்காலப் பானைகள்
- சிவப்பு, பழுப்பு மற்றும் சில சாம்பல் நிறப் பானை ஓடுகள்.
- தென்பண்ணையாற்றின் கிளையாறான பாம்பாறு இத்தொல்லியல் மேட்டினை ஒட்டிப் பாய்வதால் புதிய கற்காலத்தில் வேளாண்மை மேற்கொள்வதற்கும், ஆடு மாடுகளை வளர்ப்பதற்கும் ஏற்ற இடமாக சென்னானூர் திகழ்ந்துள்ளது.
- நுண்கற்காலம், புதிய கற்காலம், புதிய கற்காலத்தில் இருந்து இரும்பு காலத்திற்கு மாற்றம் அடைந்த நிலை மற்றும் தொடக்க வரலாற்றுக் காலம் என்ற காலவரிசைப் படியான மண்ணடுக்குகளை எளிதாக அறிய முடிகின்றது.
கொங்கல்நகரம் – முதலாம் கட்டம்:
- திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம்
- சூதுபவள மணிகள், தந்தத்தினாலான பகடை, சுடுமண்ணாலான காதணிகள், சக்கரங்கள், வட்டச்சில்லுகள், சங்கு வளையல்கள்
- செவ்வந்திக்கல் மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணாலான மணிகள், சங்கு மணிகள், பானை வனைப்பான், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள்.
- தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்டப் பானை ஓடுகள், செம்பழுப்புப் பூச்சு நிறப் பானை ஓடுகள், கருப்பு- சிவப்பு நிறப் பானை ஓடுகள்
- 5 கற்பதுக்கைகள்: மனித எலும்புகள், சங்கு வளையல்கள், அஞ்சனக்கோல், செம்பழுப்புப் பூச்சு நிறப் பானை ஓடுகள்.
மருங்கூர் அகழாய்வு – முதலாம் கட்டம்:
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்
- இரும்புக்காலம் முதல் இடைக்காலம், சிவப்புப் பூச்சுப் பூசப்பட்டப் பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
- சாம்பல் நிற ரெளலட்டட் பானை ஓடுகள், பழுப்பு நிறப் பூச்சுப் பூசப்பட்டப் பானை ஓடுகள், துளையிடப்பட்டப் பானை ஓடுகள்.
- சதுபவளம், அகேட், பளிங்கு, பெரில், கண்ணாடி, சுடுமண்ணாலான மணிகள், எலும்பு முனைகள், அஞ்சனக்கோல்கள், செப்பு வளையல் துண்டுகள், இரும்பு ஆணிகள், அம்பு முனைகள், கத்தி, வழுவழுப்பான கற்கோடரி, சுடுமண்ணாலானப் பொருட்கள்
- சோழ மன்னன் முதலாம் இராசராசனின் செப்புக் காசு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதிய கற்கால இபங்களை கண்டறியும் களஆய்வு
- சர்மா மரபுசார் கல்வி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைந்து, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள புதிய கற்கால இடங்களில் களஆய்வு மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வொருநை (தாமிரபரணி) ஆற்றுப் படுகையில் கள ஆய்வு
- மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்மேற்கில் அமைந்துள்ள பொதிகை மலையில் பொருநை ஆறு உருவாகிறது. அதில் 160 தொல்லியல் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சங்ககால கொற்கை துறைமுகத்தின் கரையோர முன் களஆய்வு
- தொன்மையானத் துறைமுகங்கள்: பாரிகாசா (மகாராஷ்டிரா, தொண்டி (கேரளா), கொற்கை மற்றும் அழகன்குளம் (தமிழ்நாடு), அரிக்கமேடு (புதுச்சேரி), கோத்தப்பட்டினம் (ஆந்திரா, கலிங்கப்பட்டினம் (ஒரிசா), தாமிரலிப்தி (மேற்கு வங்காளம்)
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இடைச் சங்க காலப் பாண்டியர்களின் கொற்கைத் துறைமுகத்தை ரூ. 1.50 கோடி செலவில் அடையாளம் காணும் பொருட்டு, முதற்கட்டமாக முன்கன ஆய்வு மேற்கொண்டது.
- கன்னியாகுமரிக்கு அருகில் கோவளத்திலும், இராமேஸ்வரத்திற்கு அருகில் அழகன்குளத்திலும் செப்டம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எவ்விதத் தொல்லியல் எச்சங்களும் கிடைக்கப்பெறவில்லை.
- பிப்ரவரி 2025 வரை பூம்புகாரில் சோனார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது சில தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
மாநிலத்திற்கு வெளியே தொல்லியல் கள ஆய்வுகள்
- பாலூர்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ஒடிசா கடல்சார் மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் நிறுவனம் ஆகியவை இணைந்து 2024 ஆம் ஆண்டில் ஒடிசாவின் பாலூரில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
பானை ஓடுகளிலுள்ள குறியீடுகள் தமிழ்நாட்டில் காணப்படுகின்ற பானை ஓடுகளிலுள்ள குறியீடுகளுக்கு பெரும்பாலானவை இணையாக காணப்படுகின்றன.
- வெங்கி
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை இணைந்து.
- மஸ்கி
கர்நாடக மத்திய பல்கலைக்கழகமும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் இணைந்து.
- முசிறி (பட்டணம்)
சங்க காலத்தில் மேற்கு கடற்கரையில் சேர நாட்டின் துறைமுகமாக விளங்கிய முசிறி இடத்தில் கேரள மாநிலத் தொல்லியல் நிறுவனங்களுடன் இணைந்து.
2025-ஆம் நிதியாண்டில் எட்டு இடங்களில் அகழாய்வுகள்:
- கீழடி – சிவகங்கை
- பட்டணமருதூர் – தூத்துக்குடி
- கரிவலம்வந்தநல்லூர் – தென்காசி
- மணிக்கொல்லை – கடலூர்
- நாகப்பட்டினம் –
- ஆதிச்சனூர் – விழுப்புரம்
- வெள்ளளூர் – கோயம்புத்தூர்
- தெலுங்கனூர் – சேலம்
அறிவியல் ஆய்வுகள்:
- கதிரியக்கக் கரிமக் காலக் கணக்கீடு (AMS) – Beta Analytic (அமெரிக்கா), வியன்னா பல்கலைக்கழகம்
- பைரோடெக்னாலஜி – இரும்பு, கண்ணாடி, மட்பாண்டங்கள் பற்றிய பகுப்பாய்வு
- ஐசோடோப் பகுப்பாய்வு – ஒத்தப்பொருட்களின் தோற்றத்தை கண்டறிதல்
- தொல் மரபணு ஆய்வு ADNA) – மனித, விலங்கு மற்றும் தாவர எச்சங்களின் மரபணு பற்றிய பகுப்பாய்வு.
தொல்லியல் அகழ்வைப்பகங்கள் / அருங்காட்சியகங்கள்- 15
- வரலாற்றுக்கு முந்தைய கால அகழ்வைப்பகம் – பூண்டி, திருவள்ளூர்
- நடுகற்கள் அகழ்வைப்பகம் – தருமபுரி
- ஆழ்கடலாய்வு தொல்லியல் அகழ்வைப்பகம் – பூம்புகார் / மயிலாடுதுறை
- நாட்டுப்புற கலை அகழ்வைப்பகம் – குற்றாலம் / தென்காசி
கீழடி அருங்காட்சியகம்
- கொந்தகையில் உலகத்தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் 31,000 சதுர அடியில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.03.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அருங்காட்சியக வளாகம் ஆறு முக்கிய தொகுதி
- வைகை மற்றும் கீழடி
- வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை
- கலம் செய் கோ
- ஆடையும் அணிகலனும்
- கடல் வழி வணிகம்
- வாழ்வும் வளமும்
- மெய்நிகர் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டு, புதிய கீழடி Soamugstsgisir (https://keeladimuseum.tn.gov.in/) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களால் 23.01.2025 அன்று இந்த இணையதளம் திறந்து வைக்கப்பட்டது.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், சிவகங்கை
- சீனாவின் Terra cotta Warriors அருங்காட்சியகம், ஜப்பானின் நாரா திறந்தவைளி அருங்காட்சியகம், மற்றும் தோலாவிரா, லோதல் ஆகிய இடங்களில் உள்ள சிந்து சமவெளி நாகரிக அருங்காட்சியகங்களைப் போன்ற உலக புகழ்பெற்ற அருங்காட்சியகங்களைப் போல உருவாக்கப்படுகிறது.
- 4.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.17.10 கோடி நிதியில் அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 23.01.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பொருநை அருங்காட்சியகம், திருநெல்வேலி
- முதலமைச்சர் அவர்கள் 09.09.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததன் படி, சிவகளை, கொற்கை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாகிறது. 10 ஏக்கர் பரப்பளவில், 55,500 சதுர அடி.
- 2022-ஆம் ஆண்டில், அரசு ரூ.33.02 கோடி ஒப்பளிப்பு வழங்கியுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம், அரியலூர்
- 4.14 ஹெக்டேர் நிலப்பரப்பில், ரூ.22.10 கோடி செலவில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியின் கீழ் நடைபெற்ற போர்ப் படையெடுப்புகள், அரசியல் உறவுகள், சீனாவுடன் வணிகத் தொடர்புகள் மற்றும் வரலாற்றுச் சாதனைகளை நினைவுகூரும் நோக்கங்களுடன் அமைக்கப்படுகிறது.
நாவாய் அருங்காட்சியகம் – மண்டபம் கிராமத்தில், இராமநாதபுரம்
- அழகன்குளம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உள்ளடக்கிய அருங்காட்சியமாக 20,000 சதுர அடியில் உருவாக்கப்படுகிறது.
நொய்யல் அருங்காட்சியகம், ஈரோடு
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அகழ்வைப்பகம்
- மத்திய பண்பாட்டு அமைச்சகம், அருங்காட்சியக மானியத் திட்டத்தின் கீழ், 80:20 [ரூ.661.76 இலட்சம்: ரூ.165.44 இலட்சம்] விகிதத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
அகழ்வைப்பகங்கள் மேம்படுத்துதல்
- பூண்டி அகழ்வைப்பகம், திருவள்ளூர் – வரலாற்றுக்கு முந்தைய கால அகழ்வைப்பகக் கட்டடம்
- குற்றாலம் அகழ்வைப்பகம், தென்காசி – நாப்டுப்புறக் கலைகள் மற்றும் பழங்குடியினர் அகழ்வைப்பகம்
- தருமபுரி அகழ்வைப்பகம் [அதியமான் கோட்டை] – 0.21.04 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடுகற்கள் அகழ்வைப்பகம்.
கல்வெட்டியல்
- 2018ஆம் நிதியாண்டில், ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கல்வெட்டுகளைப் படித்து நூலாக வெளியிடும் பணி ஐந்து ஆண்டு காலத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டூள்ளது.
- 2024ஆம் நிதியாண்டு முதல், இப்பணிகளை விரைவுபடுத்த ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம்
- தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்தில் 1974 ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்தது.
- 2021ஆம் ஆண்டில், “தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- ஒவ்எவாரு மாணவருக்கும் ரூ.6,000 மாதந்தோறும் பயிலுதவித் தொகையாக வழங்கப்படுகின்றது.
தமிழ்நாட்டிலுள்ள பாறை ஓவியங்கள்
- தமிழ்நாட்டில் இருவகையான பாறை ஓவியங்கள்: வண்ணங்களால் வரையப்பட்ட பாறை ஓவியங்கள், பாறையில் செதுக்கப்பட்ட பாறைக்கீறல்கள்
- வேட்டையாடுதல், உணவு பழக்க வழக்கம், கால்நடை வளர்ப்பு, குழு நடனங்கள் மற்றும் குதிரைச்சவாரி போன்ற பண்டைய வாழ்வியலின் பல்வேறு அம்சங்களை விளக்கும் வகையிலான பாறை ஓவியங்கள்
- கரிக்கியூர், நீலகிரி
- சிறுமலை, திண்டுக்கல்
- உசிலம்பட்டி மதுரை
- முக்கிய வண்ணங்கள்: சிவப்பு மற்றும் வெள்ளை
தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் திட்டம்:
- ஈராண்டுத் திட்டமாக 2022ஆம் ஆண்டில் ரூ.77 இலட்சம் நிதி ஆதாரத்தில் தொடங்கப்பட்டது.
- கீறல் மற்றும் குறியீடுகளை சிந்துவெளி முத்திரைகளோடு ஒப்பிட்டு இரண்டிற்கும் இடையிலான நெருங்கிய பண்பாட்டுக் கூறுகளைப் புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று வரைபடம்
- 15 இலட்சம் ஆண்டுகள் முதல் கி.பி.1600 வரையிலான காலகட்டத்திற்கு தொல்லியல் மற்றும் வரலாற்று வரைபடம் தயாரிக்கும் திட்டம், [தொல்பழங்காலம் முதல் விஜயநகர காலம் வரை]
- நூல் மற்றும் மின்னணு வடிவில் இருக்கும்.
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்
- சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது. கி.பி.1869-இல் தொடங்கப்பட்டது.
- இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்சி [ஸ்காட்லாந்து], மூனைவர் லேடன், மற்றும் திரு.சி.பி.பிரௌன் ஆகியோர் தொகுத்து வைத்த ஓலை மற்றும் தாட்சுவடிகள் இந்த நூலகத்தின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
- 72,748 அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 25,000-க்கும் மேற்பட்ட மேற்கோள் நூல்களும் பயன்பாட்டில் உள்ளன.
- இதுவரை 21,00,000 ஓலைச்சுவடிகளின் பக்கங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதில், 3500 ஓலைச்சுவடிக் கட்டுகளிலுள்ள 5,00,000 பக்கங்கள் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- மாநில சுவடிக் குழுமம்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் ஒரு தனித்துவமான சுவடி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஓலைச்சுவடிகளை அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் முறையாக மின்பதிப்பாக்கம் செய்யவும் உதவுகிறது.
- சுவடிகள் ஆதார மையம்
மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய சுவடிக் குழுமம் (National Mission for Manuscripts - NMM) இந்தியாவில் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளின் விவரங்களை திரட்டத் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் சுவடிகள் வள ஆதார மையமாக (MRC), அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செயல்பாடுகள் 2024:
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து, சர் ஜான் மார்ஷல் அவர்களின் நினைவாக “சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கு” என்ற பன்னாட்டு கருத்தரங்கினை நடத்தின.
2025 ஜனவரி 5 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கின்றனர். [5, 6, 7 மூன்று நாட்கள்]
“சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்" என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரு சிற்றேடுகளும் முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.
- 2025 ஜனவரி 23 அன்று, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “சிவகங்கை மாவட்டம், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டுவிழா” மற்றும் வலைத்தளம் தொடங்கப்பட்டது.
"இரும்பின் தொன்மை" என்ற நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.
"இரும்பு பொருட்கள் தமிழ் நிலப் பரப்பில்தோன்றியது” என்ற ஆய்வினை உலகிற்கு அறிவித்தார்கள்.
- தூத்துக்குடி சிவகளை, கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை, திருவண்ணாமலை கீழ்நமண்டி ஆகிய மூன்று இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம் “வேர்களைத் தேடி பண்பாட்டு சுற்றுலா 11.01.2025 அன்று சென்னை வர்த்தக மைய அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள அத்திரம்பாக்கத்தில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.
கொற்கை [1968 – 2020] | தூத்துக்குடி | தொடக்க வரலாற்றுக் காலம் |
கோவலன் பொட்டல் | மதுரை | பெருங் கற்காலம் |
தொண்டி [1980] | இராமநாதபுரம் | தொடக்க வரலாற்றுக் காலம் |
அழகன்குளம் [1986 – 2016] | இராமநாதபுரம் | தொடக்க வரலாற்றுக் காலம் |
கொடுமணல் [1992 – 2020] | ஈரோடு | தொடக்க வரலாற்றுக் காலம் |
பூம்புகார் [1994 – 1997] | மயிலாடுதுறை | தொடக்க வரலாற்றுக் காலம் |
மாங்குடி | திருநெல்வேலி | நுண்கற்காலம் |
பரிக்குளம் | திருவள்ளூர் | பழங் கற்காலம் |
மோதூர் | தருமபுரி | புதிய கற்காலம் |
மாங்குளம்[2006] | மதுரை | தொடக்க வரலாற்றுக் காலம். |
கீழடி[2017 – 2024] | சிவகங்கை | தொடக்க வரலாற்றுக் காலம். |
ஆதிச்சநல்லூர்[2019-2020] | தூத்துக்குடி | இரும்புக் காலம் |
சிவகளை[2019 – 2020] | தூத்துக்குடி | இரும்புக் காலம் |
மயிலாடும்பாறை[2020 – 2021 | கிருஷ்ணகிரி | புதிய கற்காலம் |
வெம்பக்கோட்டை[2021 – 2024] | விருதுநகர் | தொடக்க வரலாற்றுக் காலம். |
துலுக்கர்பட்டி[2021 – 2022] | திருநெல்வேலி | தொடக்க வரலாற்றுக் காலம். |
கீழ்நமண்டி[2022 – 2024] | திருவண்ணாமலை | இரும்புக்காலம் |
பொற்பனைக் கோட்டை[2022 -2024] | புதுக்கோட்டை | தொடக்க வரலாற்றுக் காலம். |
சென்னானூர்[2024] | கிருஷ்ணகிரி | புதிய கற்காலம் |