HomeBlogதேர்தல் பணியால் தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குதல் தாமதம்

தேர்தல் பணியால் தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குதல் தாமதம்

 

தேர்தல் பணியால்
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குதல் தாமதம்

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன்
காரணமாக கடந்த ஏப்ரல்
மாதம் 6.ம் தேதி
சட்டமன்ற தேர்தல் நடத்தி
முடிக்கப்பட்டது. கொரோனா
பரவலுக்கு மத்தியில் தமிழகத்தில் தேர்தல் மிக சிறப்பாக
நடைபெற்றது. நடந்து முடிந்த
தேர்தலில் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் தேர்தல்
பணியில் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள் தேர்தல்
பணியில் ஈடுபட்டதால் பல
அரசு வேலைகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

அதில்
ஒன்று தான் சமூக
பாதுகாப்பு திட்டங்களின் கீழ்
இந்திரா காந்தி தேசிய
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உள்ளிட்ட
எட்டு வகையான ஓய்வூதிய
திட்டங்களில் உதவித்தொகை வழங்குவது. இந்த திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/-
பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மாதத்தின் முதல் வாரத்தில்
வரவு வைக்கப்படும். மேலும்
இதனை வங்கி முகவர்கள்
பயனாளர்கள் வீட்டிற்கு நேரடியாக
சென்று வழங்கி வருவார்கள்.

ஆனால்
இந்த மாதம் அரசு
ஊழியர்கள் அனைவரும் தேர்தல்
பணியில் ஈடுபட்டதால் பயனாளர்களின் வங்கி கணக்கில் இந்த
மாதத்திற்கான உதவித்தொகை வரவு செய்வதற்கு தாமதம்
ஏற்பட்டது. தற்போது இது
குறித்து சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர்
கூறியதாவது, அலுவலர்கள் தேர்தல்
பணியில் இருந்ததால் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று அல்லது
நாளை இந்த இரு
தினங்களுக்குள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வரவு செய்யப்படும் என்றும்
அதற்கான பணிகள் விரைவாக
நடைபெறுகிறது என்றும்
தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular