பழைய படங்களுக்கு உயிரூட்டும் டீப் நோஸ்டால்ஜியா செயலி
பழைய
புகைப்படங்களுக்கு உயிரூட்டும் டீப் நோஸ்டால்ஜியா செயலி
சமூக ஊடக பயனர்கள்
மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செயலியை மைஹெரிடேஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மைஹெரிடேஜ் நிறுவனம் கூறியதாவது:
பழைய
புகைப்படங்களை மறுசீரமைப்பு நிபுணத்துவம் பெற்ற
‘டி–ஐடி’ அனிமேஷன்
தொழில்நுட்பத்தின் மூலம்
புதுமை செய்வதற்கான தொழில்நுட்பம் உரிமத்தை மைஹெரிடேஜ் நிறுவனம்
பெற்றுள்ளது.
இந்த
செயலி மூலம் வரலாற்று
புகைப்படங்களின் முகங்களை
உயிரூட்டவும், உயர்தர,
யதார்த்தமான வீடியோ காட்சிகளை
உருவாக்கவும் முடியும்.
இந்த செயலியில் மீம்ஸ்
உருவாக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஒரு
புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், குறுகிய விடியோவாக
மாற்றம் செய்து நண்பர்கள்
மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பகிரும் வசதியும்
உள்ளது.
இந்த
செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் தனியுரிமை
பாதுகாப்பை கருத்தில் கொண்டு
தானாகவே நீக்கப்படும்.