TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலில் அர்ச்சகர்
பயிற்சி பள்ளியை மீண்டும்
திறக்க முடிவு – அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலில்
அர்ச்சக பயிற்சி பள்ளி
14 ஆண்டுகளுக்குப் பிறகு
திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
அர்ச்சகர் பயிற்சி பள்ளியில்
பயிற்றுவிக்க ஆகம
ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உயரிய
பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என
கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த
2007ம் ஆண்டு இதே
பள்ளியில் பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில
மாதங்களுக்கு முன்பு
தமிழக அரசு பணி
வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலில்
சிவாச்சாரியார்கள் தொடர்ந்த
வழக்கு காரணமாக 2008ம்
ஆண்டு முதல் இந்த
பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு
மீண்டும் அர்ச்சகர் பயிற்சி
பள்ளியை திறக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பள்ளியை
திறப்பதற்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பல
ஆண்டுகளுக்குப் பிறகு
மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலுக்கு சொந்தமான அர்ச்சகர்
பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சி பள்ளியில் பயிற்சி
விற்பதற்கு ஆசிரியர்களின் நியமிக்க
கோவில் நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
உரிய
பயிற்சி பெற்ற அனுபவம்
உள்ள ஆசிரியர்கள் இதற்கு
விண்ணப்பிக்கலாம். மேலும்
இதற்கு 18 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here