Monday, August 11, 2025
HomeBlogகறவை மாடு வளர்ப்பு பயிற்சி

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

கறவை மாடு
வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்
வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊரக இளைஞர்களுக்கான திறன்
வளர்க்கும் பயிற்சி திட்டத்தின் கீழ், வரும் 13 முதல்,
18
வரை, ‘ஒருங்கிணைந்த கறவை
மாடு வளர்ப்புஎன்ற
தலைப்பில், ஆறு நாள்
இலவச பயிற்சி முகாம்
நடக்கிறது.

கறவைமாடு
இனங்கள், தேர்வு செய்யும்
முறைகள், கால்நடை பராமரிப்பு, தீவன மேலாண்மை, ஊறுகாய்
புல் மற்றும் குறைந்த
செலவில் அடர்தீவனம் தயாரித்தலின் செயல் விளக்கம். பண்ணை
அமைக்கும் முறை, தூய்மையான
பால் உற்பத்தி, பாலில்
இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரித்தல், மண்புழு
உரம் மற்றும் பஞ்சகவ்யம் தயாரித்தல். நோய் மேலாண்மை,
பண்ணை பொருளாதாரம், இன்சூரன்ஸ் மற்றும் கடன் வசதி
குறித்து விளக்கப்படுகிறது. பால்
பண்ணை மற்றும் பால்
பதப்படுத்தும் நிலையத்துக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து
செல்லப்படும். விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக
மகளிர், இளைஞர்கள் மற்றும்
ஆர்வம் உள்ளவர்கள் கலந்து
கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள், வேளாண் அறிவியல்
நிலையத்துக்கு நேரில்
வந்தோ அல்லது 04286 266345,
266650
என்ற எண்கள் மூலமாகவோ
தொடர்பு கொண்டு, தங்கள்
பெயரை முன்பதிவு செய்து
பயன்பெறலாம். இவ்வாறு, வேளாண்
அறிவியல் நிலைய தலைவர்
தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments