திருப்பூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கறவை மாடு வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி வரும் வியாழக்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது.
இது குறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கறவை மாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி வரும் வியாழக்கிழமை (ஜூலை 6) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று கறவை மாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


