புதுச்சேரி பல்கலைக்
கழக
சேர்க்கைக்கு கியூட்
பொது நுழைவுத் தேர்வு
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில்
உள்ள ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு ‘கியூட்‘
பொது நுழைவுத் தேர்வு
மூலம் சேர்க்கை நடத்தப்பட
உள்ளது.அனைத்து வகை
மத்திய பல்கலைகளிலும், மாணவர்
சேர்க்கைக்கு, ‘கியூட்‘
என்ற பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என பல்கலை
மானிய குழுவான யு.ஜி.சி.,
அறிவித்துள்ளது.
அதன்படி
புதுச்சேரி மத்திய பல்கலைக்
கழகத்தில் உள்ள 10 ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை ‘கியூட்‘ பொது
நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது .இப்படிப்புகளுக்கு அடுத்த மாதம்
6ம் தேதிக்குள் https://cuet.samarth.ac.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதி, இட ஒதுக்கீடு
உள்ளிட்ட தகவல் குறிப்பேடு www.pondiuni.edu.in/admissions-2022-23
என்ற இணைய முகவரியில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும்
விபரங்களுக்கு https://nta.ac.in அல்லது https://cuet.samarth.ac.in என்ற
இணைய முகவரியை பார்க்கவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


