Tuesday, August 12, 2025
HomeBlogநாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? - மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? – மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

 

நாடு முழுவதும்
மீண்டும் ஊரடங்கு? – மாநில
முதல்வர்களுடன் பிரதமர்
நாளை ஆலோசனை

கடந்த
ஆண்டு இறுதியில் நாட்டில்
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து
இந்த ஆண்டு ஜனவரி
மாதம் முதல் நாட்டு
மக்கள் அனைவருக்கும் கொரோனா
தடுப்பூசி வழங்கும் பணிகள்
மிக தீவிரமாக நடைபெற்று
வருகிறது. இந்நிலையில் யாரும்
எதிர்பாராத வகையில் கடந்த
சில மாதங்களாக நாட்டில்
சில மாநிலங்களில் கொரோனா
நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை
தொட்டு வருகிறது.

இதனால்
நாள்தோறும் நாட்டில் கொரோனா
பாதித்தவர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாக தற்போது
நாடு முழுவதும் தடுப்பூசி
செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டு
மக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக
இடைவெளியை கடைபிடித்தல் போன்ற
பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பாரத
ஸ்டேட் வங்கி நிபுணர்
மற்றும் கான்பூர் ஐஐடி
பேராசிரியர் உள்ளிட்டவர்கள் கருத்து
கணிப்பை நடத்தினர்.

அதன்
முடிவில் இந்த மாதம்
(
ஏப்ரல்) மத்தியில் கொரோனா
நோய்த்தொற்று பாதிப்பு
புதிய உச்சத்தை தொடும்.
மேலும் மே மாதம்
இறுதியில் கொரோனா பரவல்
குறையத் தொடங்கும் என்று
தெரிவித்தனர்.

இது
குறித்து பிரதமர் நரேந்திர
மோடி நாளை (ஏப்ரல்
8, 2021)
மாநில மற்றும் யூனியன்
பிரதேச முதல்வர்களுடன் ஆலோசனை
நடத்தவுள்ளார். இந்த
ஆலோசனையில் கட்டுப்பாட்டு விதிமுறைகள், ஊரடங்கு பிறப்பித்தல் மற்றும்
தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவற்றை பற்றி ஆலோசிக்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular