பயிர் காப்பீடு,
கிசான் கடன் அட்டைக்கான சிறப்பு முகாம் பயனடைய
விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் – கோவை
பயிர்
காப்பீடு மற்றும் கிசான்
கடன் அட்டைக்கான சிறப்பு
முகாம்கள், ஒரு வாரகாலம்
நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
மாவட்டம் முழுவதும், அனைத்து
கிராமங்களிலும் வேளாண்
துறை மூலம் பல்வேறு
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்
ஒரு பகுதியாக வரும்,
24 முதல் மே 1ம்
தேதி வரை ஒரு
வாரத்துக்கு மத்திய, மாநில
அரசுகள் இணைந்து நடத்தும்,
‘சிறப்பு விவசாயிகளின் பங்களிப்பே எமது முன்னுரிமை‘ எனும்
முகாம்கள் நடக்க உள்ளன.
முகாம்களில் பயிர் காப்பீடு,
உழவர் கடன் அட்டை,
மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் நுண்ணீர் பாசனத்
திட்டம் குறித்தான விரிவான
விளக்க காட்சிகள், கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள் வழங்கப்பட
உள்ளன.
உழவர்
கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயிர்
காப்பீடு திட்டத்தின் முக்கிய
அம்சங்களான விவசாயிகள் காப்பீடு
செய்திடும் வழிமுறைகள், காப்பீடு
பெற தகுதிகள், இழப்பீட்டுக்கான காரணிகள், இழப்பீடு கணக்கிடும் முறை, காப்பீடு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிய
கூடிய வழி வகைகள்,
புகார்கள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் குறித்தும், விவசாயிகளுக்கு விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே,
கிராம பஞ்சாயத்து அளவில்
நடைபெறக்கூடிய இம்முகாம்களில், விவசாயிகள் கலந்து கொண்டு
பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.