கடலுாரில் கிரிக்கெட் பயிற்சி முகாம்
கடலுார்
அண்ணா விளையாட்டரங்கில், 19 வயதுக்கு
உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் துவங்கியது.
தமிழ்நாடு
கிரிக்கெட் சங்கம், கடலுார்
மாவட்ட கிரிக்கெட்சங்கம் இணைந்து,
கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி
முகாம், கடலுார் அண்ணா
விளையாட்டரங்கில் நேற்று
(5ம் தேதி) முதல்
ஜூன் 15ம் தேதி
வரையில் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நேற்று பயிற்சி
முகாம் துவங்கியது.
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்த முகாமில்
ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தினமும் காலை 5:00 மணி
முதல் 8:00 வரையிலும், மாலை
4:00 முதல் 6:00 வரையிலும் நடக்கிறது.தமிழ்நாடு
கிரிக்கெட் சங்கபயிற்சியாளர் ஜெசுராஜ்
நடத்தி வருகிறார்.
இலவசமாக
நடத்தப்படும் இந்த
முகாமில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்
பயிற்சி பெறலாம் என,
கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.கடலுார்
மாவட்ட கிரிக்கெட் சங்க
தலைவர் பாஸ்கரன், செயலாளர்
கூத்தரசன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.