திருப்பூரில் மாற்றுத்திறனாளிக்கு கடன் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கிக்கடன் மதிப்பீட்டு முகாம், கலெக்டர்
அலுவலகத்தில் 28ம்
தேதி நடக்கிறது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட
தொழில் மையம், மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கி,
ஆவின் நிறுவனம் சார்பில்,
வங்கிக்கடன் மதிப்பீட்டு முகாம்,
28 ம் தேதி காலை,
11.00 மணிக்கு, கலெக்டர் அலுவலக
கூட்டரங்கில் நடக்கிறது.
மத்திய,
மாநில அரசுகளின் தொழிற்கடன் திட்டங்கள், ஆவின் விற்பனை
மையம் அமைக்கும் திட்டங்கள் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு, தொழிற்கடன் வழங்கப்பட உள்ளது. கலெக்டர்
அலுவலகத்தில் நடக்கும்
முகாமில், தேசிய அடையாள
அட்டை வைத்துள்ள, 18 முதல்
60 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய
மாற்றுத்திறனாளிகளின் பெறறோர்
பயன்பெறலாம்.
தேசிய
அடையாள அட்டை, ரேஷன்
கார்டு, வாக்காளர் அட்டை,
ஆதார் அட்டை நகல்கள்,
பாஸ்போர்ட் அளவு போட்டோ
– 3, பான்கார்டு நகல், வங்கி
கணக்கு புத்தக நகல்,
கல்வி தகுதி சான்றுடன்,
முகாமில் பங்கேற்று, தொழிற்கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.மேலும்
விவரங்களுக்கு, கலெக்டர்
அலுவலக வளாகத்தில் உள்ள,
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்தை, 0421 2971165 என்ற எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.