பொதுத்தேர்வு பதட்டம்
குறைக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங்
பொதுத்தேர்வு பதட்டத்தை போக்கும் வகையில்,
மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. செய்முறை தேர்வுகள்
வரும், 25ம் தேதி
துவங்கவுள்ளன. அதற்கான
பணிகள் பெரும்பாலும் கோவையில்
முடிந்துள்ளன.
ஆசிரியர்களுக்கு கண்காணிப்பு பணிகள் ஒதுக்கீடு
செய்யும் பணி நிறைவு
பெற்றுள்ளது. பொதுவாக, தேர்வு
சமயங்களில் மாணவர்கள் மத்தியில்
ஒரு வித பதட்டம்,
மன அழுத்தம் ஏற்படுவது
இயல்பு.
கடந்த
காலங்களில் நடமாடும் உளவியல்
வாகன திட்டம் செயல்பாட்டில் இருந்ததால், ஆண்டு முழுவதும்
தொடர்ந்து, உளவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வந்தனர்.
தற்போது,
அவசர கதியில் பாடம்
நடத்தி, தேர்வுக்கு தயாராகவே
ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதாலும், வீடுகளிலும் பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும் , மாணவர்களிடம் ஒரு வித பதட்ட
உணர்வு காணப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில்:
செய்முறை
தேர்வுகள், 25ம் தேதி
துவங்கவுள்ளன. தேர்வுகள்
முடிந்த பின்பு பள்ளிகள்
அளவில் எழுத்துத்தேர்வுகளை எதிர்கொள்ளவும், மனஅழுத்தம் போக்கவும், உயர்கல்வி
தேர்வுக்கு வழிகாட்டவும் பயிற்சி
அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


