கொரோனா வைரஸ்
வௌவாலிலிருந்து பரவியது
– நிபுணர் குழு
2019-ஆம்
ஆண்டு சீனாவில் பரவிய
உயிர்க்கொல்லி நோயான
கொரோனா வைரஸ் வௌவாலிலிருந்து பரவியது என்றும், சீனாவிலுள்ள ஒரு ஆய்வு கூடத்தில்
இருந்து பரவியது என்றும்
பல்வேறு கருத்துகள் நிலவி
வந்தது. சீனாவின் கடல்
உணவு சந்தையில் இருந்து
இந்த வைரஸ் பரவியதாகவும் கூறப்பட்டது. இந்த எல்லா
சந்தேகங்களுக்கும் பதில்
அளிக்கும் விதத்தில் உலக
சுகாதார மையம் தற்போது
பதிலளித்துள்ளது.
உலக
சுகாதார அமைப்பின் சார்பில்
CORONA வைரஸ் உருவானது
குறித்து கண்டறிய நிபுணர்
குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழு
கடந்த ஜனவரி மற்றும்
பிப்ரவரி மாதங்களில் சீனாவின்
விஞ்ஞானிகளுடன் சேர்ந்து
உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களில் ஆய்வு
செய்தது. இந்த ஆய்வு
முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கொரோனா வைரஸ்
வௌவாலிலிருந்து வேறு
விலங்குகளுக்கு பரவியிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
பிறகு
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவியிருப்பதற்கும் அதிக
வாய்ப்புகள் இருக்கிறதாம். அதே
சமயம் வௌவாலிலிருந்து நேரடியாக
மனிதர்களுக்கும் CORONA வைரஸ் பரவியிருக்கலாம் எனவும்
நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதேபோல குளிரூட்டப்பட்ட உணவுகளிலிருந்தும், பரிசோதனை கூடங்களிலிருந்தும் கண்டிப்பாக CORONA வைரஸ் பரவியிருக்காது எனவும்
நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.