HomeBlogApril 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் CORONA தடுப்பூசி – மத்திய அமைச்சர்...

April 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் CORONA தடுப்பூசி – மத்திய அமைச்சர் தகவல்

 

April
1
முதல் 45 வயதுக்கு மேற்பட்ட
அனைவர்க்கும் CORONA தடுப்பூசிமத்திய அமைச்சர்
தகவல்

கடந்த
மார்ச் மாதம் முதல்
நாட்டில் CORONA தொற்றின்
பரவல் நீடித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த அரசு
பாதுகாப்பு நடவடிக்கையையும், ஊரடங்கு
முறையையும் கடைபிடித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலின்
ஆரம்ப நிலையிலேயே அரசு
இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியது.
ஆராய்ச்சியின் முடிவில்
கடந்த அக்டோபர் மாதம்
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்டது.

தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்
முதலில் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டது. இடையில்
சற்று குறைந்திருந்த கொரோனா
பரவல் கடந்த 10 நாட்களாக
அதிகரித்து வருகிறது. இதனால்
டெல்லியில் பிரதமர் நரேந்திர
மோடி தலைமையில் மத்திய
அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அது முடிந்த பின்னர்
மத்திய தகவல் மற்றும்
ஒளிபரப்புத்துறை அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் அவர்கள்
செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர்
வரும் ஏப்ரல் 1ம்
தேதி முதல் 45 வயதுக்கு
மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா
தடுப்பூசி போட முடிவு
செய்துள்ளதாக அறிவித்தார். இதற்கு தகுதியுள்ள மக்கள்
அரசிடம் பதிவு செய்து
கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இணை நோய்
இல்லாதவர்களும் ஏப்ரல்
1
முதல் தடுப்பூசி போட்டுக்
கொள்ளலாம். கடந்த 24 மணிநேர
நிலவரப்படி, இந்தியாவில் 40,715 பேர்
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular