தமிழகத்தில் நாளை 4வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் நான்காவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், நாளை நடைபெற உள்ளது. இம்மாதத்தில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறினார்.
அவர் அளித்த பேட்டியில்:
உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால், நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதார பணியாளர்களும் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்த உதவுவதாக கூறியதால், நாளை நான்காவது தடுப்பூசி முகாமை நடத்த தயாராகி வருகிறோம்.
20 ஆயிரம் இடங்களில் நடக்கும் முகாம்களில், காலை 7.00 முதல் மாலை 7.00 மணி வரை தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.