HomeBlogகொரோனா பேட்ச் மாணவர்கள் வேலைக்கு புறக்கணிக்கப்படமாட்டார்கள்

கொரோனா பேட்ச் மாணவர்கள் வேலைக்கு புறக்கணிக்கப்படமாட்டார்கள்

Corona Batch students will not be neglected at work

கொரோனா பேட்ச் மாணவர்கள் வேலைக்கு
புறக்கணிக்கப்படமாட்டார்கள்

நடப்பு,
2021
ம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து, வெளியே வரும்
மாணவர்கள், வேலைக்கு எடுத்துக்
கொள்ளப்படுவது இல்லை
என்று எழுந்த சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை,
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில், ‘கிளை
விற்பனை அலுவலராகபணியாற்ற,
நேர்முகத் தேர்வுக்கு வரச்
சொல்லி, HDFC வங்கி
விளம்பரம் சமீபத்தில் வெளியானது.
அதில், ‘2021ம் ஆண்டில்
தேர்ச்சி பெற்று வெளியே
வந்தவர்கள், விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்என்ற சர்ச்சைக்குரிய வரி
இருந்தது.

அதாவது,
2021
ல் வெளிவந்த மாணவர்கள்,
கொரோனா பேட்ச்என்று,
அழைக்கப்படுகின்றனர். அவர்கள்
முறையாக தேர்வு எழுதி
தேர்ச்சி பெறாதவர்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பே கிடைக்காது; பெரிய நிறுவனங்கள் எதுவும்
மதிக்காது என்று, விமர்சனம்
வைக்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதற்கு
வலுசேர்ப்பது போல்,
HDFC.யின் விளம்பரம்
அமைந்தது. பல்வேறு சமூக
வலைதளங்களில், அந்த
விளம்பரம் சுற்றி வந்ததோடு,
பெற்றோர் மனதில் கலக்கத்தையும் அதிகப்படுத்தியது.

இந்த விளம்பரம் உண்மை தானா என்பதை அறிய, மும்பையில் உள்ள, HDFC.,யின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
அது தவறுதலாக வெளியாகிய
விளம்பரம். பின்,சரியான
விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில்,
குறிப்பிடப்பட்டுள்ள வயது
வரம்புக்குள் உள்ள
இளைஞர்கள், எந்த ஆண்டில்
தேர்ச்சி பெற்றிருந்தாலும், விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதைப் பார்த்து,
200
பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்தனர். அதில் பலர்,
2021
ல் தேர்ச்சி பெற்றவர்கள் தான்.இவ்வாறு அவர்
கூறினார்.

முதல்
விளம்பரத்தை, உள்ளூரில் உள்ள
வங்கியின் ஏஜென்சி வெளியிட்டதாகத் தெரிகிறது.கொரோனா பேட்ச்
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது என்று எழுந்த
வதந்திக்கு, இதன் வாயிலாக
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!